பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை முயற்சியை எல்லாம் சின்ன பின்னப்படுத்துகிறது; துன்பத்தை உண்டாக்குகிறது. ஆனால் அதே குரங்கை இராமன் ஆண்டது போல நாமும் அடக்கி ஆண்டுவிடுமோனால் அதுவே நமக்கு உதவியாக இருக்கும். - மனமென்னும் யானை மதம் பிடித்த யானையினிடம் யாராவது போனால் தன் துதிக்கையினால் அவர்களைப் பற்றி இழுத்து மிதித்து அழித்து விடுகிறது. அதைக் கண்டால் எல்லோரும் ஒடுகிறார்கள். அந்த யானையை அடக்கிய பிறகு தன்னைக் குத்தி நோவ அடிக்கும் மாவுத்தனுக்குப் பணிந்து கீழே கிடக்கும் அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிறது. தன்னைக் கட்டுவதற்குரிய இரும்புச் சங்கிலியைத் தன் துதிக்கையினாலேயே அவனிடம் எடுத்துக் கொடுக்கிறது. காலையும் தூக்கிக் காட்டுகிறது. மதம் அடங்கின யானையாக மனம் ஆகிவிட்டால் தன்னைக் கட்டுகிற வழியை அதுவே காட்டும். இல்லாவிட்டால் மதம் பிடித்த யானை சுற்றியுள்ளவர் களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, தன்னை அடக்க வருகின்ற மாவுத்தனையும் கொன்று வீழ்த்துவது போலத் துன்பம் கொடுத்து, ஆத்மாவையே கொன்றுவிடும். அத்தகைய மனத்தைப் பார்த்து அருணகிரிநாதர் சொல்லு கிறார். அந்த மனம் இப்போது நல்ல மனமாகிவிட்டது. முன்பு மதம் பிடித்த யானை போலத் தன் இச்சைப்படி எங்கெங்கோ ஒடித் திரிந்து கொண்டிருந்தது. தன் வழியில் குறுக்கிடுபவர்களின் மேல் சினம் கொண்டு சீறி விழுந்தது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் அலைந்து ஓடிற்று. அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்லும் கழுதை போல அது இருந்தது. இப்பொழுதோ அருணகிரிநாதப் பெருமானாகிய ஆசிரியர் உபதேசம் செய்த பின்பு, அந்த மனம் மடைமாறிச் சென்றது. வெகுளி அடங்கியிருக்கிறது. தன்னிடமுள்ள பொருள் களை எல்லாம் தானமாகப் பிறருக்குக் கொடுத்துப் பற்று நீங்கி இருக்கிறது. முன்பு சிறிது கண்ணை மூடினாலும் என்ன என்ன எண்ணமோ வரும்; யார் யார் முகமோ தோன்றும். இப்பொழுது கண்ணை மூடும் பொழுது முருகப் பெருமானின் திருவுருவந் 69