பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தான் வருகின்றது. அவன் சம்பந்தமான நினைவுகள் தாம் வரு கின்றன. இப்போது மனம் கழுதை அன்று முருகப் பெருமானாகிய அரசனைச் சுமந்து வரும் யானை. வேலாயுதப் பெருமான் வருகிறான் வருகிறான் என்று பராக்குக் கொடுத்துக் கொண்டு வருவது போலத் துதிக்கையை உயரத் தூக்கி தூக்கி அசைத்துக் கொண்டு வருகிறது. உலகத்தினிடம் பயம் ஞானம் என்ற வைர முடிச்சைப் பெற்றவுடன் ஆத்மா பயப் படுகிறது. இதை மனமாகிய பையன் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமே!’ என அஞ்சுகிறது. மாயை பல பல விதமாக வந்து வேறு வேறு விளையாடல்களைச் செய்யுமே. அவற்றினின்றும் பிழைத்து இந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமே!’ என்று பெரியோர் அஞ்சுகிறார்கள். ஒருவன் பாங்கிலிருந்து நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு டாக்ஸியில் வந்து இறங்குகிறான். அவனுடைய தந்தை, 'ஏண்டா பஸ்ஸில் வரக்கூடாதோ?” என்கிறார். அவன், 'டாக்ஸிக்கு ஒரு ரூபாய் செலவாகுமே என்று எண்ணிப் பஸ்ஸில் ாறி வந்தால் நூறு ரூபாயையும் யாராவது முடிச்சு மாறிகள் அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். டாக்ஸிக்கு ஒரு ரூபாய் போனாலும் எஞ்சிய 99 ரூபாய் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனவே' என்கிறான். சில நாளைக்குள் செலவழிந்து போகும் செல்வத்துக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றால், பலகாலம் செய்த தவப் பயனாகப் பெற்ற ஞானமாகிய தனத்தைப் பாதுகாக்க எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இறைவன் திருவருளால் பெற்ற ஞானச் செல்வத்தைப் பாது காத்து வைக்க வேண்டுமே என்று அறிவு பயப்படுகிறது. உலகிலுள்ள யாராவது நம் இந்திரியங்களுக்கு இன்பத்தைக் கொடுத்துத் திருடிப் போவார்களோ? நாக்குக்குச் சுவையான சாப்பாட்டைப் போட்டுத் தூங்கப் பண்ணிக் கைப்பொருளை அபகரித்துப் போவார்களோ? நமது பழைய பிறவி வாசனையை உண்டு பண்ணி விடுவார்களோ என்று அஞ்சுகிறது. ராத்திரி நேரமானாலோ தாமச குணத்தினால் சோர்வு வருகிறது. பகலானாலோ பகைவர்கள் 7Ο