பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தெரியாது ஒரு யூதர்க்குமே. எப்படி ஒர் அருமையான பொருள் கிடைத்துவிட்டால் வேறு யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படியே கிடைத்தற் கரிய பேறான ஞானத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பூதர்க்கும் - ஓர் உயிருக்கும் - தெரியாமல் இருக்க வேண்டும். 2 அருணகிரியார் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார்; 'ஒரு யூதர்க்கும் தெரியாத ஓர் இடம் உண்டு. நமக்கு இரவும் கூடாது. பகலும் கூடாது. இரவு, பகல் அற்ற அந்த வெளிக்குப் போய் விடலாம் வா' என்று அழைக்கிறார். 'போகிற வரைக்கும் துணை வேண்டும். போன பிற்பாடும் துணை வேண்டும். கள்ளர் நம்மைக் கண்டு பயப்பட்டு நெருங்காமல் போக வேண்டுமென் றால் ஆயுதம் கையில் உடையவன் துணையாக வர வேண்டும். பெரிய பெரிய அசுரர்களைச் சங்காரம் செய்து வாகை சூடிக் கொண்டிருக்கும் தேவசேனாபதியாகிய முருகனுடைய துணையைப் பெற்றுப் போகலாம் வா. சூரபன்மன் முதலிய அசுரர்களைச் சங்காரம் செய்வதற்குக் கருவியாய் இருந்த வேல் அவன் கையில் இருக்கிறது. நமக்குக் கவலை இல்லை. அவனுடைய பாதங்களையே சரணாகப் பற்றிக் கொண்டு போகலாம் வா' என்கிறார். ஞானத்தின் உருவம் அவன் கையில் உள்ள வேல் எத்தகையது? நாம் பற்றிக் கொள்கிற அவனது பாதார விந்தம் எத்தகையது? வேதா கமசித்ர வேலாயு தன்வெட்சி பூத்ததண்டைப் பாதாரவிந்தம். ஆண்டவனது கையில் உள்ள வேல் ஞான மயமானது. அது ஞானசக்தி. தாமச குணங்களைப் போக்கி, அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பது அந்த ஞானவேல். ஞானத்திற்கு உருவம் என்ன? 'அவன் மிக்க அறிவாளி' என்றால், அவனிடமுள்ள அறிவைக் காண இயலாது. அதற்கு 72