பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை உருவம் இல்லை. அவன் அறிவுக்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டுமென்றால் நாம், 'அவன் பெரிய அறிவாளி; எம்.ஏ. படித்திருக்கிறான்' என்று கூறுகிறோம். அறிவுக்கு உருவம் இல்லையானாலும் எம்.ஏ. படித்திருக்கிறான் என்பதன் மூலம் அதற்கு ஒரு வகையாக அடையாளம் கூறுகிறோம். அதையே உருவம் என்று சொல்லலாம். இறைவனோடு தொடர்வுடைய அறிவு எதுவோ, அது மெய்ஞ் ஞானம். ஞானம் இருவகைப்படும். கல்வி, கேள்வி யினாலே வருவது அபரஞானம். உணர்வினாலே அநுபவத் தினாலே பெறு வது பரஞானம். அநுபவத்தினால் பெறுகின்ற ஞானத்திற்கு இந்த நாட்டில் எப்பொழுதும் தலைமை உண்டு. கல்வி, கேள்வி ஞானத்தோடுகூட, அநுபவத்தினால் உயர்ந்த அறிவைப் பெற்ற எத்தனையோ மகான்கள் இந்த நாட்டில் ஆசாரியர்களாக இருந் திருக்கிறார்கள். அபர ஞானத்தைத் தர உதவியாக இருப்பவை நூல்கள். எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். வேதம் இறைவன் அருளியது என்பர். அது எல்லோருக்கும் பொதுவானது. வேதத்தோடு சார்த்திச் சொல்பவை ஆகமங்கள். அந்த அந்தச் சமயத்தவர் களுக்கு ஏற்றபடி தனித்தனியே ஆகமங்கள் இருக்கின்றன. பொதுவான வேதத்தையும், சிறப்பான ஆகமங்களையும் சேர்த்து வேதாகமம் என்று சொல்வது வழக்கம். வேதத்தில் மந்திரம் மிகவும் முக்கியம். ஆகமத்தில் தந்திரம் மிக வும் முக்கியம். அதனால் வேதத்தை மந்திரமென்றும் ஆகமத்தைத் தந்திரம் என்றும் சொல்வர். வேதம் இறைவனைப் பற்றியும், அறங்களைப் பற்றியும் சொல்கிறது. ஆகமங்கள் இறைவனை அடைவதற்குரிய செயல் முறைகளைச் சொல்கின்றன. நால் வகை நூல்கள் வேதம் எசமானனைப் போல், "இது செய்; இது செய்யாதே' என்று கட்டளையிடுகிறது. ஒரு தலைவன் இப்படி இப்படிக் காரியங்களைச் செய் என உத்தரவு இடுவது போல இருக்கிறது அது. ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று கேட்கக்கூடாது. அது எசமானனுடைய உத்தரவு. அதனால் வேதத்தை, "பிரபு சம்மிதை' 73