பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை என்று அவள் சொல்வதற்குள்ளேயே, "நீயும் ஒன்று வாங்கிக் கொள்ளேன்' என்று சொல்லிவிடுவான். இதற்காகத்தானே அவள் இவ்வளவு குறைவாகப் பேசுகிறாள்? இவ்வாறே காவியம் மிக இனிமையாகக் கருத்தைச் சொல்லி, நம் உள்ளங்களிலே இன்பம் சுரக்கும்படி செய்து அறிவூட்டுகிறது. அதனால் 'காந்தா ஸம்மிதை' என்று அதைச் சொல்கிறார்கள். சாகுந்தலம், வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் முதலிய காவியங்களில் உள்ள உண்மை எல்லாம் வேதத்தில் இருப்பனவே. ஆனால் வேதம் போல அப்படியே இவை சொல்லவில்லை. கதையை அலங்காரமாகச் சொல்லி இன்பத்தைச் சுரக்கச் செய்து, தம்மை மறந்து படித்து உண்மையை உணரும்படி செய்துவிடு கின்றன. புராணங்கள் உருவகக் கதைகள். குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல, அரிச்சந்திரன் கதை முதலியவற்றைச் சொல்லி வேதப் பொருளின் சாரத்தை மனத்தில் பதியவைப்பது புராணம். இப்படி வேதாகமம், ஸ்மிருதி, காவ்யம், புராணம் என நான்கு பிரிவுகளாக ஞானம் நிற்கிறது. இவை நான்கும் ஞானத்தின் வடிவங்கள் என்று கூறலாம். வேதாகம வேல் நமக்கு கிடைக்கும் ஞானம் எப்படி வருகிறது? வேதமாக வருகிறது. ஆகமமாக வருகிறது. பிற நூல்களாக வருகிறது. எம்பெருமான் திருக்கரத்திலுள்ள வேலை ஞான வேல் என்று பெரியவர்கள் சொன்னார்கள். அருணகிரிநாதர் அந்த ஞானத்திற்கு உருவம் கொடுத்து ஞானம் தரும் நூலாகிய வேதத்தையும், ஆகமத்தையும் நினைத்து, அந்த வேல் வேத வேல், ஆகம வேல் என்று சொல்கிறார். இறைவனோடு சம்பந்தப்பட்டட எல்லாவற்றையுமே வேதம் என்று சொல்வது வழக்கம். சிவபிரான் ஏறிச் செல்லும் இடபம் வேதம். அவன் அணிகின்ற ஆடை வேதம். அவன் பாதுகை வேதம். அவன் சிலம்பு வேதம் என்பர். அருணகிரிநாத சுவாமிகள் இந்த முறையை நினைத்து, மற்றவர்கள் சொல்லாத புது வகையில், முருகன் வேதா 75