பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கமத்தையே வேலாக வைத்திருக்கிறன் என்கிறார். வியப்புக்குரிய பொருளாக இருக்கிறது அந்த வேல்; சித்ரவேல் அது. வேதா கமசித்ர வேலாயுதன் கிடைப்பதற்கரிய பொருள் ஒன்று கிடைத்தால் அதை அறிவுடைய மனிதனால்தான் காப்பாற்ற முடியும். உயர்ந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதற்குரிய பாதுகாப்பாக இருப்பது ஞானவேல். ஞானவேல் உலகத்தைத் தனக்குள் அடக்கி ஆண்ட சூரபன்மனது உடலைத் துளைத்து, அவனுக்குக் கவசம் போலிருந்த கிரெளஞ்ச கிரியையும் பொடிப் பொடியாக்கிப் பெரிய ஆச்சரியமான காரியங்களைச் செய்தது அந்த வேல். அஞ்ஞானத்தைப்போக்க உதவும் ஞானமே வடிவான வேதாகமத்தை வேலாக வைத்திருக்கிறான் முருகன். அவனை நமக்கு துணையாகக் கெள்ள வேண்டும். வேல் நமக்குத் துணையாக வேண்டுமென்றால் அந்த வேலை உடைய வேலாயுதன் தாளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் காலைப் பற்றினால் வேலை விடுத்து நம்மைக் காப்பாற்று வான். காலைப் பிடிப்பவருக்குப் பயன் படுவதாகவே வேலை வைத்திருக்கிறான். திருத்தாள் அழகு அவன் திருத்தாள்கள் எத்தகையவை? அநாதிகாலம் தொட்டுப் பக்தர்கள் எப்போதும் அருச்சனை செய்து வரும் பாதம் அது. அவர்கள் தூவிய மலர்கள் அதன்பால் இருக்கின்றன. வெட்சிப் பூ நிரம்பக் குவிந்திருக்கிறது. அவன் பாதத்திலேயே பூத்த மாதிரியாக அது மலர்ச்சியோடு இருக்கிறது. வெம்மையுடைய மனிதன் கையில் பட்டால் மலர் வாடிவிடும். செடியில் இருப்பது போலவே, அதையும்விட மிக்க மலர்ச்சி யோடு, முருகன் கால்களில் வெட்சி மலர் கிடக்கிறது. அவ்வளவு தண்மை உடையது அவன் தாள். மலரை அணிந்ததோடு தண்டை யையும் அணிந்த திருவடி அது; அரவிந்தம் போன்றது. 76