பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்தான். அவன் தாவர சாஸ்திர வல்லுநன். ஆனால் மற்றவன் தன் கையில் கிடைத்த மாம்பழத்தை நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டான். எதைப் பற்றியும் யோசிக்க வில்லை. இரண்டு பேரும் மாம்பழத் தோட்டம் எங்கே இருக்கிறது என்றுதான் முதலில் ஆராய்ச்சி செய்தார்கள். மாம்பழம் கிடைத்த மாத்திரத்தில் ஒருவன் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டான். மற்றொருவன் கிடைத்த மாம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு பின்னும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தான். ஆராய்ச்சிக்கும் பேச்சுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்து செல்வதால் பயன் இல்லை. "ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா' என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார். இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் அவனருள் பெறுவது பற்றியும் ஆராய்ச்சி பண்ணத்தான் வேண்டும். உண் பதற்கு உணவு படைத்தால் அது உணவுதானா, அல்லது நஞ்சா என ஆராய்ச்சி செய்யலாம். அது உணவுதான் என்று அறிந்த பிறகு அதைச் சாப்பிடாமல், 'இந்த அரிசியின் பெயர் என்ன? எங்கே விளைந்தது? எத்தனை நாள் பயிர் எந்தக் கடையில் வாங்கியது?" என்றெல்லாமா துருவித் துருவி ஆராய்ச்சி செய்வது? ஆத்மாவுக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருபவன் இறைவன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால், அவன் அருளைப் பெறு வதற்கு அந்தக் கணமே உழைக்க ஆரம்பித்துவிட வேண்டாமா? ஞானமாகிய செல்வம் கிடைத்துவிட்டால் அதைப் பாதுகாத்து அவனோடு இயைந்து சும்மா இருக்க வேண்டாமா? சும்மா இருத்தல்தான் அநுபவம். அருணகிரியார் உபதேச முறை “மனமே, வா, சும்மா இருக்கலாம்" என்று அருணகிரியார் தம் மனத்தைப் பார்த்துச் சொன்னதுதான் இது. “தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள்' 81