பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 என்று நேரே நம்மைப் பார்த்துச் சென்ற பாட்டில் சொன்னவர் இப்பொழுதும் தம் மனத்தைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்கிறார். இரண்டும் நமக்காகச் செய்த உபதேசமே. வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும்இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப் போதாய், இனிமன மே!தெரி யாது.ஒரு யூதர்க்குமே. (மனமே! வேதமும், ஆகமமுமான அழகிய வேலைப் படையாகக் கொண்ட முருகனது வெட்சி மலர் மலர்ந்தாற்போல விளங்கும் தண்டையை அணிந்த பாதமாகிய தாமரையே பாதுகாப்பாக நிற்க, இரவும் பகலும் இல்லாத, சூது அற்ற சிதாகாச வெளியில் ஒருயிருக்கும் தெரியாமல் உலகினின்றும் ஒளித்துச் செயலற்று இருக்க, இப்போது வருவாயாக. வேதம், ஆகமம் ஆகிய சித்ரவேல். சித்ரம் - அழகு; வியப்புக்குரியது என்றும் சொல்லலாம். அரண் - பாதுகாப்பு. அல் - இரவு. சூது - அஞ்ஞானத்தால் விளையும் நிகழ்ச்சிகள். வெளி - சிதாகாசம். போதாய் - வருவாயாக. பூதர் - உயிரையுடையோர். 82