பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பெருமையும் கருணையும் தம் அநுபவத்தைச் சொல்லும்போது அவருடைய பெருமை தெரிகிறது. இறங்கி வந்து பேசும்போது அவருடைய கருணை வெளியாகிறது. இந்த இரண்டு நிலைகளிலும் அவர் இருப்பது அவருடைய சிறப்பை மிகுதிப்படுத்துகிறது. அருணகிரியார், மனம் அடங்காதவர்களுக்கும் நல்வழி காட்டு கிறார். மனம் அடங்கிய பிறகு எந்த வழியில் போக வேண்டு மென்று தெரியாதவர்களுக்கும் வழிகாட்டுகிறர். போன பாட்டில் நல்ல மனம் உடையவர்கள், பக்குவம் இருந்தும் வழி தெரியாது நிற்கும்போது, மேற்கொள்ளும் நெறியைத் தம் மனத்தைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்லி வழி காட்டினார். இந்தப் பாட்டு மிகக் கீழ் நிலையில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டுமென்று பாடுவது; எல்லாவற்றுக்கும் அடிப்பீட மாகிய அறத்தைச் சொல்வது. நாணய மாற்றம் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகிறவர்கள் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு போவார்கள். நீண்ட தூரம் போகிறவர்கள் பணத்தை முடிச்சாகக் கொண்டு போவது வழக்கம்; அல்லது நோட்டாக மாற்றிக் கொண்டு போவார்கள். வெளி நாட்டுக்குப் போகிறவர்கள் இந்த நாட்டுப் பணத்தை நிறைய எடுத்துக் கொண்டு போனாலும் பயன் இல்லை. அந்த நாணயம் போகும் தேசத்தில் செலாவணி ஆகாது. அங்கே செலாவணி ஆகக் கூடிய வகையில் நாணய மாற்றம் செய்யும் காரியாலயத்தில் அந்தத் தேசத்து நாணயமாக மாற்றிக் கொண்டு போக வேண்டும். ஆகவே, "அந்த ஊரில் எந்த நாணயம் செல்லும்? நம்மிடம் இருக்கும் நாணயத்தை, அந்த ஊரில் செல்லும் நாணயமாக எப்படி மாற்ற வேண்டும்?' என்பன போன்ற விஷயங்களை வெளிநாடு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீண்ட பயணம் இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் நெடுந்துரப் பயணம் ஒன்று உண்டு. உலகத்தில் பிறந்த யாராலும் இந்தப் பிரயாணத்தைத் தவிர்க்க முடியாது. 84