பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் இந்த நெடுவழிப் பிரயாணத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்புச் செய்ய வேண்டும். இங்கே சுகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் போகிற இடத்திலாவது சுகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு. உள்ளே இருக்கும் போது அழுக்குச் சட்டை, வெளியே போகும் போது வெள்ளைச் சட்டை என்று நாம் திட்டம் வைத்துக் கொள்கிறோம். அதே போலப் போகிற இடத்தில் சுகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற நாம், அப்படி இருப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், நாம் அப்படிச் சிந்திப்பதில்லை. இந்த உலகத்தில் நம்மிடம் உள்ள செல்வத்தை அந்த உலகத்தில் பயன் படுவதற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள மறந்துவிடுகிறோம். இங்கும் அங்கும் இங்கே உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மையானதாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் மக்கள் மதிக்கமாட்டார்கள். வேறு உலகத்திற்குப் போனால் மனத்தை வளர்த்துப் பக்குவப்படுத்த வேண்டும். ஆயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் மிக்க அறிவுடை யவனாக இருந்தாலும் ஒர் இடத்திற்குப் போகும் போது நல்ல ஆடம்பரமான மேலாடை இல்லாமல் போனால் என்ன மதிப்புக் கிடைக்கும்? எந்த வகையில் பார்த்தாலும் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே உடம்பின் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். அங்கே உள்ளத் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஆடை அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அங்கே மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். மன அழுக்கை மாற்றிக் கொண்டு போனால் போதுமா? அங்கே சாப்பாடு வேண்டாமா? இந்த உலகத்தில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை அந்த உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயம் எது? அதுதான் புண்ணியம்; அது அறத்தினால் வருவது. நம்பிக்கை வேறு உலகத்தில் செலாவணி ஆகும் நாணயங்களைப் பெறு வதற்கு இந்த உலகத்தில் நம்மிடமுள்ள நாணயங்களைத் 85