பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நம்மிடம் இருக்கும் மிகுதியான ப்ொருளை இறைவனுக்கு நாம் அர்ப்பணம் செய்தால் நம்மிடம் இல்லாத பொருளை அவன் நமக்கு அளிக்கிறான் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருந்தது. "இறைவனுக்கு நாம் பால் அபிஷேகம் செய்வதனால் கண்ணுக்கு முன்னாலே என்ன பயன்?" என்று இப்போது கேட்கிறார்கள். தென்ன மரத்துக்கு வேரிலே விடுகின்ற தண்ணிர் இளநீராக வருகிறது. அப்படி இறைவனுடைய திருவடிக்கு நாம் பக்தியால் செய்பவை அவன் அருளாக மாறிப் பயன் தருகின்றன. அறத்தில் நம் பொருளையும், ஆற்றலையும் செலவிட்டால் அது புண்ணிய மாக மாறி மறுமைக்குப் பயன்படுகின்றது. பாங்கில் உள்ள பணம் பாங்கில் பணம் போடுகிறோம். பாங்கில் இருப்பவர்கள் நம்முடைய பணத்தை அப்படியே மூட்டை கட்டி வைப்பதில்லை. ஆனால் நம் பணம் அங்கே இருக்கிறது என்பதற்குக் கணக்கு உண்டு. கோயில் கட்டுபவன், தண்ணிர்ப் பந்தல் வைக்கிறவன், ஏழைகளுக்கு உபகாரம் செய்கிறவன் ஆகிய பலர் செய்யும் நற் செயல்களும் இறைவனுடைய அருளாட்சிப் பாங்கில் அடை யாளமிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பணத்துக்குரிய கணக்கு நமக்குத் தெரியாது. அந்த உலகத்தில் நமக்குப் பயன் படுவதற்குத் தகுந்த நாணயமாக அவை மாறுகின்றன. 'இவ்வுலகிலுள்ள மக்கள் எல்லோரும் கடைசியாகச் செய்ய வேண்டிய பிரயாணம் ஒன்று இருக்கிறது. அது நெடுவழி. அந்த வழியில் செல்லும்போது நமக்குப் பயன்படும் செல்வத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டாமா?' என்று கேட்டால் ஒருவர், “என்னிடம் பத்து வீடுகள் இருக்கின்றன. பத்து லட்சம் ரூபாய் இருக்கிறது. அவற்றை வெள்ளி ரூபாயாகவே கட்டி வைத்திருக் கிறேன், இவை பயன்படாவா?’ என்கிறார். அருணகிரியார், "இவை யாவும் போகக்கூடிய உலகத்தில் உனக்குப் பயன்படுவ தில்லையே!' என்கிறார். "அப்படியா? இவற்றால் எனக்குப் பயன் உண்டாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று மறுபடியும் கேட்டால், அவர் சொல்கிறார். 88