பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் விட்டால் அத்தனையும் பயன் இல்லை. நாம் தவம் செய்ய முடியாது. இந்திரிய நிக்கிரகம் செய்ய இயலாது. விரதங்கள் அநுசரிப்பதற்கான நிலையும் நம்மிடம் இல்லை. ஆனால் மனம் உள்ள வரை இறைவனைத் தியானிக்க வழி உண்டு. ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேலை நாள்தோறும் ஐந்து நிமிஷமாவது பார்த்து அதை மனத்தில் நிறுத்தித் தியானம் செய்யலாம். அது முடியாத காரியம் அன்று. இந்தப் பழக்கத்தை நாம் நடைமுறையில் செய்துகொண்டு வரவேண்டும். விளக்கை ஏற்றி வைத்து வேலைப் பார்க்க வேண்டும். உடனே கண்ணை மூடிக்கொண்டு அந்த வேலை உள்ளே பார்த்துப் பழகவேண்டும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து வேலை மனத்தில் நினைக்கப் பழகினால் பின்பு அந்த வேலே சோதிப் பிழம்பாக உள்ளத்தில் நிற்கும். இப்பொழுதெல்லாம் கண்ணை மூடினால் நமக்கு இருட்டுத் தோற்றும். வேலைத் தியானம் பண்ணிப் பண்ணிப் பழகிவிட்டால் மின்கீற்றுப் போல அந்த வேல் உள்ளத்தில் ஒளிவிடும். அந்தப் பழக்கம் முறுகினால் வேலே பெரிய சோதியாக நமக்குத் தோன்றும். "வேலே ஒளிப்பிழம்பாக உள்ளத்திலே தோன்றுகிறது. அதனால் என்ன பயன்?' என்ற கேள்வி எழலாம். வேல் மறைந்து ஒளிப் பிழம்பு தோன்றும்போது தன்னை மறக்கிற நிலை வந்துவிடும். கவலை, கடமை, கட்டு என்பன எல்லாம் மறைந்து போகும்; இன்பம் உண்டாகும். இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு ஒளிமயமான தோற்றத்தைப் பார்ப்பதென்பது எளிதான செயல் அல்ல. எப்போதும் புறத் திலும் அகத்திலும் இருட்டு நிரம்பிய வாழ்க்கையில் நாம் போராடு கிறோம். கண்ணை மூடிக்கொண்டு உள் ஒளி நிரம்பப் பார்த் தோமானால் நம்முடைய புலன்கள் அடங்கி இன்பம் உண்டாகும். அப்போது நம்மை மறக்கும் நிலை வரும். இத்தகைய சிறந்த இன்பத்தை அடைவதற்கு மிக எளிதான வகையை அருணகிரிநாத சுவாமி இந்தப் பாட்டில் சொல்லித் தருகிறார். 'வடிவேற் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள வேலை ஒளி மயமான வேலை, தியானம் பண்ண வேண்டும். அதை 93.