பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 எந்தச் சமயத்திலும் மறவாமல் இருக்கவேண்டும். ஞானத்திற்கு மாறுபாடான காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் அதை மறவா மல் நினைத்தால் நல்ல இன்பத்தைப் பெறலாம்; பேரின்பத்தை அடையலாம்' என்று உபதேசம் செய்கிறார். உபதேசமாகச் சொல்லாமல், தாம் அப்படி நினைப்பதாக இந்தப் பாட்டில் அருளியிருக்கிறார். கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண்டு அயர்கினும் வேல்மறவேன். 2 இந்தச் செய்தியை அவர் முருகனைப் பார்த்துச் சொல்கிறார். 'அவன் எப்படிப் பட்டவன்? அவன் பெருமை என்ன' என்பதை அடுத்த அடிகளில் சொல்கிறார். முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்சூர்க்கொன்ற ராவுத்தனே! பேய்களின் உவகை முருகன் சூரபன்மனைக் கொன்றவன். கந்தபுராணத்திலுள்ள பலவகையான காட்சிகளில் எம்பெருமான் செய்த வீரத் திரு விளையாடல்களைப் பார்க்கிறோம். அருணகிரிநாதப் பெருமானின் திருப்புகழிலும் மற்ற நூல்களிலும் கந்தபுராணத்தில் காணாத பலவகையான கற்பனைக் காட்சிகளைக் காணலாம். இங்கே பழைய பேய்க் கூட்டங்கள் போர்க்களத்தில் வந்து ஆடுகின்றன. அதற்குக் காரணம் எம்பெருமான் சூரபன்மனைக் கொன்றிருக் கிறான். சூரன் தனியாக வந்து இறைவனை எதிர்க்கவில்லை. கணக்கற்ற அசுரர்களையும் படைகளையும் திரட்டிக் கொண்டு வந்து முருகனை எதிர்த்தான். அந்தப் போர்க்களம் மிகப் பெரியது. போர் நடந்த காலம் பதினெட்டு ஆண்டுகள் என்று சொல்வார் கள். எத்தனையோ அசுரர்கள் இறந்தார்கள். போர்க் களத்தில் இறந்து கிடக்கும் பிணத்தை உண்ணுவது பேய்களின் வழக்கம். பல காலமாகப் பசித்திருக்கும் பேய்களுக்குப் போர்க் களத்தில் 92