உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் விருந்து கிடைக்கிறது. அந்தப் பேய்கள் எல்லாம் பல காலமாகக் காத்திருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு, முது கூளித் திரள் என்று சொன்னர் உடம்பு தளர்ந்து போய் தம்முடைய முதுமைப் பருவத்தைப் புலப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அவை. இப்போது போர்க்களத்தில் நல்ல விருந்தை உண்டு ஆடுகின்றன. நன்றாகச் சாப்பிட்டவர்களுக்கு ஆனந்தம் உண்டாகும். விருந்து உண்ட பிற்பாடு நடனம் ஆடுவது நாகரிகச் செயல். இங்கே பேய்களுக்கு நன்றாக உண்ட ஆனந்தக் களிப்பினால் ஆடவேண்டுமென்ற ஆசை தோன்றுகிறது. போர்க்களத்தில் முரசுகள் அங்கங்கே கிடக்கின்றன. பேய்கள் அவற்றை எடுத்துக் கொட்டுகின்றன. - அநுகரண ஒலி அருணகிரிநாதப் பெருமானுக்கு அநுகரண சத்தங்களைப் பாட்டுக்கு நடுவில் வைத்துச் சொல்வது ஒரு வழக்கம். அவருடைய திருப்புகழைப் பார்த்தால் எத்தனையோ வகையான அநுகரண ஒலிகளைச் சந்தத்தில் அமைத்திருப்பது தெரியும். அந்த முறையைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம். முது கூளித் திரள் - முதிய பேய்க் கூட்டங்கள். அவை முரசுகள் கொட்டிக்கொண்டு ஆடுகின்றன. அந்த முரசுகளை அவை எப்படி முழக்குகின்றன என்பதை ஒலிக் குறிப்போடு பாட்டில் வைத்திருக்கிறார். டுண்டுண் டுடு டுடு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக் கொட்டி ஆடுகின்றனவாம். இப்படிப் பேய்க் கூட்டங்கள் எல்லாம் பிணங்களை உண்டு, அதனால் இன்பமுற்று முரசுகளைக் கொட்டி ஆடும்படியாகச் சூரனை சங்கரித்த பெருமானே! என்று துதிக் கிறார். முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு டுண்டுண்டு டிண்டிண் டெனக்கொட்டியாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே! 93