பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ராவுத்தன் ராவுத்தன் என்ற சொல் முஸ்லிம்களை நினைப்பூட்டுகிறது. அருணகிரியார் காலத்திற்கு முன்பே இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில், மாணிக்கவாசகருக்காகக் குதிரை ராவுத்தராக வந்த ஆண்டவனது திருக் கோலத்தை முஸ்லிம்கள் போலவே வருணித்திருக்கிறார் அதைப் பாடிய புலவர். பழங்காலத்தில் அரபு நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் குதிரைகள் வருவது வழக்கம். அந்தக் குதிரைகளோடு முஸ்லிம் களும் வந்தார்கள். ராவுத்தன் என்ற சொல்லுக்குக் குதிரை வீரன் என்று பொருள். மாவுத்தன் என்பது யானை வீரனையும், ராவுத்தன் என்பது குதிரை வீரனையும் குறிக்கும் சொற்கள். மேற்கு நாட்டி லிருந்து வந்த முஸ்லிம்கள் பெரும்பாலோர் குதிரைகளைக் கொண்டு வந்தவர்கள். ஆகையால் முஸ்லிம்கள் என்றால் குதிரைக்காரர்கள் என்கிற நினைப்பு இந்த நாட்டவருக்கு உண்டாயிற்று. அதனால் முஸ்லிம்களை ராவுத்தர்கள் என்று அழைக்கலானார்கள். இந்தச் சொல் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்குகிறது. எம்பெருமான் மயிலாகிய குதிரைகளை நடத்துகின்றவன். அதனால் அவன் ஒருவகையான குதிரை வீரன். அது கருதியே இப்பாட்டில் ராவுத்தனே என்று விளிக்கிறார். பின்னாலே வருகிற ஒரு பாட்டிலும், "தனிமயில் ஏறும் இராவுத்தனே' என்று பாடுவார். குதிரை ராவுத்தர் ஆத்மநாத சுவாமி எழுந்தருளியிருக்கிற தலம் திருப்பெருந் துறை. அங்கேதான் மாணிக்கவாசகர் உபதேசம் பெற்றார். அந்த ஊர்த் திருக்கோயிலில் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்ட பத்தில் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தில் இறைவனுடைய உருவம் இருக்கிறது. அந்த உருவத்திற்கு இப்பொழுதும் பூசை செய்து வருகிறார்கள். அவரைக் குதிரை ராவுத்தர் என்றும், அந்த மண்டபத்தைக் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்குகிறார்கள். அங்கே மற்றோர் ஆச்சரியச் செயல் நிகழ்கிறது. குதிரை ராவுத்தர் எழுந்தருளியிருக்கும் இடம் 94