பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் வந்துலவு கின்றதென முன்றிலிடை உலவவே வசதிபெறு போதும், வெள்ளை வட்டமதி பட்டப்பகற்போல நிலவுதர மகிழ்போதும், வேலையமுதம் விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும் வேளையிலும், மாலைகந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம் விளையாடி விழிதுயிலினும் சந்ததமும் நின்அருளை மறவா வரம்தந்து தமியேனை ரட்சைபுரிவாய்! சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே!’ தாயுமானவர் மகளிருடன் இன்பம் புணர்வதை வெளிப் படையாகச் சொல்லவில்லை. கலவி இன்பத்தை, 'நிலவுப் பயன் கொள்ளுதல்" என்று குறிப்பாகச் சொல்வது புலவர் மரபு. இந்தப் பாட்டில், 'வெள்ளை வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர மகிழ்போதும்' என்பது மகளிர் இன்பத்தையே குறிப்பதாகக் கொள்ள வேண்டும். வரதுங்க ராம பாண்டியர் பாடல் வரதுங்கராமபாண்டியர் என்னும் மன்னர் சிறந்த சிவபக்தர். அவரும் இதே கருத்துடன் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். 'இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும் பொருக்கென நடக்கும் போதும் பொருந்திஊண் துய்க்கும் போதும் முருக்கிதழ் கனிவா யாரை முயங்கிநெஞ் சழியும் போதும் திருக்களா வுடைய நம்பா சிந்தைஉன் பால தாமே.” 'முருக்கிதழ் கனி வாயாரை முயங்கி நெஞ்சழியும் போதும் சிந்தை உன் பாலதாமே என்று மகளிர் இன்பத்தை நுகரும் போதும் மனம் இறைவனை நினைக்கும் என்று இவர் சொல் 97