பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் 1 மனிதன் வாழ்கிறான்; சாகிறான். சாவது மிகப் பெரிய துன்பம். வாழும்போதும் ஒவ்வொரு நாளும் துன்பத்தை அநுபவிக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். எத்தனை துன்பத்தை அநுபவித்தாலும் வாழ்க்கையில் சலிப்பு உண்டாவதில்லை. தினந்தோறும் நம் உடம்பில் இருக்கிற நோய்களால் துன்புறு கிறோமே! இந்த நோய்க்கு இடமாக உள்ள உடம்பை ஒழித்து விடலாம்' என்று யாரும் நினைப்பதும் இல்லை. நாகரிக வசதிகள் வளர்ந்து வருகிற இக்காலத்தில் துன்பத்திற்குக் காரண மாகவுள்ள உடம்பைப் போக்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனாலும் இதனைப் போக்க மனம் வருவது இல்லை. காரணம்; துன்பத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. நாளைக்கு ஒருகால் இந்தத் துன்பம் நீங்கி இன்பம் வருமோ என்ற நம்பிக்கையினால் அவர்கள் வாழ்கிறார்கள். நம்பிக்கை நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது. நம்பி நம்பி இன்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு முன் முடிவில் கூற்றுவன் வந்து நிற்கிறான். கூற்றுவனால் வருகிற துன்பத்தைக் காட்டிலும் பெரிது வேறு ஒன்றும் இல்லை. இறப்பைக் கண்டு அஞ்சுபவர்கள் பலர். மாணிக்கவாசகப் பெருமான் இறைவன் அருளால் இன்பநலம் பெற்றவர். ஆனாலும் கூற்றுவன் வருங்கால் மனம் எப்படி அஞ்சுமோ என்று அவர் நடுங்குகிறார். 'இறப்பதனுக் கென்கடவேன்!”