பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் உண்டாகும். அந்த இன்பம் இந்திரிய நுகர்ச்சிக்கு அப்பாற் LIL-L—ġil. - நாம் நினைக்கிற இன்பங்கள் எல்லாம் ஐந்து இந்திரியங் களின் வாயிலாக வருகின்றவை. ஐந்து பொறிகளின் வாயிலாக மனத்தில் இன்ப துன்பங்கள் சாருகின்றன. நாம் பெறுகின்ற துன்பங்களுக்கு அளவு கருவி ஐந்து இந்திரியங்கள். இறைவன் திருவருளால் கிடைக்கிற இன்பம் பொறி புலன்களுக்கு அப்பால் இருப்பதனால் அந்த இன்பத்தை நமக்குத் தெரிந்த அளவை களால் அளக்க முடியாது. வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும்போது நாம் பல நல்ல காரியங்கள் செய்ததனால் கிடைத்தது என்று தருக்குகிறோம். துன்பம் வந்தால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறோம். பெரும்பாலும் பிறரைக் காரணமாகச் சொல்லத் துணிகிறோம். இந்த இரண்டு வகையான நினைவுகளும் கூடா வென்று கருதியே, எல்லாம் ஊழ்வினையால் நிகழ்கின்றன என்று சொன்னார்கள் பெரியோர்கள். உண்மையும் அதுதான். ஊழ்வினை ஒருவன் நம்மைத் தன் கையால் அடிக்கிறான். நம்மை அடிப்பது கை என்றா சொல்கிறோம்? அவன் அடித்தான் என்று சொல்கிறோம். அவன் தன் கையைக் கருவியாகக் கொண்டு அடிக் கிறான். அவன் கை அடிப்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு அந்தக் கையைக் கொண்டவனைத் தெரியாமல் இருப்பது அறியாமை. அவன் கை அடிக்கவில்லை, அவனே கையாகிய கருவியால் அடிக்கிறான் என்று தெரிந்து கொள்வது போலவே, அவனைக் கருவியாகக் கொண்டு நம்மை அடிப்பது வேறு ஒன்று என்று உணரவேண்டும். அதுதான் நாம் பண்டு செய்த தீவினை. பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு நாய்க்கு இருக்கும் அறிவுகூட இல்லை. நாய் ஒடும்போது ஒருவன் கல்லை எடுத்து அடிக்கிறான். கல் நாயின்மேல் பட்டு அதற்குத் துன்பத்தை விளைக்கிறது. அதற்காக நாய் கல்லைக் கடிக்கப் போவதில்லை. கல்லை வீசி எறிந்தவனைப் போய்க் கடிக்கிறது. அந்த அறிவு நமக்கு இல்லையே! அரிவாள் கருவி. 101