பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அதை உபயோகிப்பவன் கர்த்தா. 'எய்தவன் இருக்க அம்பின் மேல் நோகலாமா?" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். அரிவாளாகிய கருவியைக் கொண்டவன் வெட்டினால் அவனைத் தான் கோபித்துக் கொள்ள வேண்டும். அவனைக் கருவியாகக் கொண்டு வெட்டச் செய்கிற வேறு ஒன்று இருக்கிறது. அதுதான் பண்டை வினை. அதனையே விதி என்றும், ஊழ்வினை என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். கடமையும் விதியும் பெரியவர்கள் விதி என்று சொன்னதற்கும் நாம் இப்போது விதி என்று சொல்வதற்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. முயற்சி எதுவும் இன்றிச் சோம்பலில் மூழ்கி எதையும் விதியின் தலையில் போட்டுவிட்டுத் தப்பப் பார்க்கிறோம் நாம். நன்மை ஏற்படும்போது யாரும் விதி என்று சொல்வது இல்லை. நமக்கு லாபம் கிடைத்தது; என் தலை விதி' என்று சொல்வது இல்லை. தீமை ஏற்படும்போது, "ஐயோ! இது என் தலைவிதி' என்று நொந்து கொள்கிறோம்; அல்லது அந்தப் பழியைப் பிறன் தலையில் சுமத்தி விடுகிறோம். - மனிதன் துன்பம் அடைவது இயற்கை. அதை அடைவதற்குக் காரணமாக வேறு ஒருவனைச் சுட்டிக் காட்டிக்கொண்டு போனால் போகப் போக அவன் வாழ்க்கையே கசப்பாக முடியும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதாக முடியும். ஒரு சமூகமும் மற்றொரு சமூகமும், ஒரு நாடும் மற்றொரு நாடும் சண்டை போட்டுக் கொள்வதாக விளைந்து, கடைசியில் உலகம் முழுவதும் போர்க்களம் ஆகிவிடும். அதற்குப் போக்கு என்ன? 'நம்மை அவனா அடித்தான்? அவனைக் கருவியாகக் கொண்டு நம் விதி அல்லவா அவனை அடிக்கத் தூண்டிற்று? நம்முடைய விதி கர்த்தா. அவன் கருவி என்னும் மனோபாவம் வந்தால் அவன்மேல் கோபம் வராது. நமக்குத் துன்பம் வரும்போதும் நன்மை வரும்போதும் விதியால் ஏற்ட்டவை என்று நினைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள் நம் நாட்டுப் பெரியவர்கள். கடமையைச் செய்யாமல் விதியைக் காரணமாகச் சொல்கிறவன் சமுதாயத்துக் கும் இறைவனுக்கும் துரோகம் செய்கிறவன் ஆகிறான். அவன் தான் அடைந்த துன்பத்திற்குக் காரணமென்று பிறரிடம் வெறுப்புக் 1O2