பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் நட்பாக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. கிரகங்களுக்குச் சாந்தி பண்ணுவதைவிடக் கிரகங்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கிற பெருமானையே சரணாகதி அடைந்துவிட்டால் அந்தக் கிரகங்களால் நமக்கு என்ன தொல்லை விளையும்? இன்ன கிரகத்திற்கு இன்னபடி சாந்தி செய்ய வேண்டுமென்பதை நூலி லிருந்து நன்கு அறிந்து நமக்கு யாராவது சொல்ல வேண்டும். நூலில் நுட்பமாகச் சொல்லியிருக்கிறபடி நடந்தால் நமக்கு ஒருகால் கிரகத்தினால் விளையும் துன்பங்கள் குறையலாம். ஆனால் அவ்வளவு நுட்பமாகக் கணித்துச் சொல்பவர்கள் மிகவும் அரியர். எல்லாவற்றுக்கும் பரிகாரமாக இறைவனுடைய துணை நமக்கு இருக்குமானால் எந்தக் கிரகம் எப்படி வந்தாலும் அதனால் விளையும் துன்பம் நமக்குக் குறைந்துவிடும். என் செயும்? அருணகிரிநாதப் பெருமான் வினையாலும் அந்த வினையின் விளைவைத் தருவனவாக நினைக்கின்ற நாளினாலும் கோளி னாலும் வருகின்ற துன்பங்களுக்கு நல்ல பரிகாரம் சொல்கிறார். முருகனுடைய திருவருள் இருந்தால் அவற்றால் அச்சம் கொள்ள வேண்டாம் என்று உறுதி கூறுகிறார். 'முருகப் பெருமான் தன்னுடைய திருக்கோலத்தை எனக்குக் காட்டினால் நாள் என் செயும்? வினை தான் என் செய்யும்? கோள் என் செயும்? கொடும் கூற்றுவன் என் செய்வான்?' என்று கேட்கிறார். நாள்என் செயும்வினை தான்என் செயும்.எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே. நால்வகைத் துன்பங்கள் உலகில் பிறந்து வாழ்கிற மக்களுக்கு நாள், கோள், வினை, கொடுங்கூற்று ஆகிய நான்கின் வாயிலாகத் துன்பம் உண்டா கின்றன. முதல் மூன்றும் மனிதன் வாழ்கிற காலத்தில் துன்பத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையின் முடிவில் ஒன்று துன்புறுத்து கிறது. அது கொடுங்கூற்று, நாளும் கோளும் வினையும் கருவி களாக நின்று மனிதனுடைய வாழ்க்கையைப் பலவகையாக 1O5