பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தியானம் மனத்திண்மை இல்லாமல் மனம் போனபடி எல்லாம் பொறி களைச் செல்லவிட்டு உலகியல் அநுபவத்தைப் பெறுகின்ற மனிதன், இறைவன் திருவருளைப் பெற வேண்டுமென்று விரும்பினால் பல காலம் முயற்சி செய்ய வேண்டும். இறைவனை நினைந்து உபாசனை பண்ண வேண்டும். மனம் அலைய அலையத் துன்பம் மிகுதியாகின்றது. பொறிகள் சிதறுண்டு செல்வதற்குக் காரணம் மனந்தான். அந்த மனத்தை ஒருமுகமாக நிறுத்துவதற்கு இறைவனுடைய திருக்கோலத் தியானம் அவசியம். முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை எண்ணி மனத்தை ஒருமுகப் படுத்தி வழிபடும் நிலை உண்டானால் மனத்திற்குத் திண்மை ஏற்படும். அந்தத் திண்மை, வாழ்க்கையில் உண்டாகின்ற துன்பங் களுக்கு அஞ்சாத நிலையை உண்டாக்கும்; நாளுக்கும், கோளுக்கும், வினைக்கும் சிறிதும் தளர்வு அடையாத நிலையை உண்டாக்கும். கோள் நல்லன ஆதல் பாண்டி நாடு சமணர்களால் நிலைகுலைந்திருந்த காலத்தில் அந்த நாட்டை ஆண்ட கூன் பாண்டியன் சமணர் சமயச் சார்பிலே நின்றான். சமணர்கள் அரசனைக் கைவசப்படுத்தித் தங்கள் சமயத்தின் பெயரால் சைவ சமயத்தினருக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தார்கள். கூன் பாண்டியனுடைய மனைவியாகிய மங்கையர்க் கரசியாரும், அமைச்சர் குலச்சிறை யாரும் ஞானசம்பந்தப் பெருமானைப் பாண்டி நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமென்று விரும்பினார்கள். திருமறைக்காட்டில் சம்பந்தப் பெருமான் எழுந்தருளியிருந்தபோது தூதுவர்களை அனுப்பித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஞான சம்பந்தப் பெருமான் புறப்படலாம் என்று கிளம்பியபோது நாளும் கோளும் சரியாக இல்லை. அதனை அறிந்து உடன் இருந்த அப்பர் சுவாமிகள் இப்போது போவது நலம் அன்று என்று சொன்னார். "சமணர்கள் மிகப் பொல்லாதவர்கள். அவர்கள் செய்த வஞ்சனையை நான் அறிவேன். அவர்களிடத்தில் அகப்படக்கூடாது. நாளும் சரியாக இல்லை' என்று அவர் வற்புறுத்தினார். இறைவனுடைய திரு வருளைப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் அதற்குச் சிறிதும் அஞ்சவில்லை. 'எம்பெருமானுடைய திருவருள் இருக்கும் 103