பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பரிகாரம் குமரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. தாளும் தாளைச் சேர்ந்த அணிகளும் ஒரு பகுதி. சண்முகம் ஒரு பகுதி. தோளும் அதைச் சார்ந்த கடம்பும் ஒரு பகுதி. பிரபஞ்சச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் ஆருயிர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பது தாள். அந்தத் திருவடியில் அவன் சிலம்பும், சதங்கையும், தண்டையும் அணிந்திருக்கிறான். ஏதேனும் ஒன்றை மாத்திரம் அணியவில்லை. அந்தத் திருவடி அருள் செய்யப் புறப்பட்டு வருகிற கோலத்தை முன்கூட்டியே ஒலியினால் அடியார்கள் அறிந்து இன்புற வேண்டும் என்று அவற்றை எல்லாம் அணிந்திருக்கின்றான். திருவடியைக் காண்பதற்கு முன்னாலே அதில் அணிந்திருக்கும் சிலம்பு, சதங்கை, தண்டை ஆகியவற்றின் ஒலியைக் கேட்டே பக்தர்களுக்கு அவன் திருவடி நினைப்பு உண்டாகி விடுகிறது. "தாளும், முகமும், தோளும் எனக்கு முன் வந்து தோன்றி.டின் நாள் முதலாயின என்ன செய்யும்?' என்று கேட்கிறார் அருண கிரியார். துன்பத்தைத் தருகின்ற பொருள்கள் நாள், கோள், வினை, கூற்று என்பன. இந்த நான்கில் முதல் மூன்றும் வாழ்க்கை நிகழும் போது வருவன. நான்காவதாகிய கூற்று வாழ்க்கை மாயும்போது வருவது. குமரேசரின் இரண்டு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் வாழும் காலத்தில் நமக்கு முன்னே வந்து தோன்றும் நிலை வந்தால் நாள் நம்மை ஒன்றும் செய்யாது. நாள் என் செய்யும்?...................... குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்....................... எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! எம்பெருமானின் ஆறு முகத்தை நினைத்தால் வினை ஒன்றும் செய்யாது. நமக்குத் தீய வினைகளால் விளையும் துன்பத்தை எம்பெருமானுடைய ஆறுமுகங்களும் நீக்கிவிடும். 11 O