பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 திருக்கோயிலை விட்டு வீட்டுக்கு வந்து அமைதியாக இருந்து பாட்டை மெல்லப் பாடினால் கோயிலில் கண்ட திருவுருவம் நினைவுக்கு வரும் வராவிட்டால் மறுபடியும் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும். பெயரும் பொருளும் ருகால் கண்ட பொருளைப் பிற்காலத்தில் அதனுடைய பேரைச் சொல்லும்போது மனிதர்களுக்கு நினைக்க முடிகிறது. இது மனத்தினுடைய இயல்பு. சொல்லைக் கொண்டே பொருளைத் தெரிந்து கொள்வது வழக்கம். இறைவனுடைய திருநாம மாகிய சொல் அவனுடைய திருக்கோலமாகிய பொருளைக் காட்டும். அதற்காகத்தான் எம்பெருமான் பலபல வடிவங் களையும், திருநாமங்களையும் கொண்டிருக்கிறான். கண்ணாலே காணுகின்ற பொருளைக் காணாத காலத்தில், கருத்தினாலே காண்பதற்குத் தூண்டு கோலாக இருப்பது அதனுடைய பெயர். அவனுடைய திரு நாமங்களும் துதிகளும் அப்படியே இருக்கின்றன. அவனுடைய துதிகளைச் சொல்லிக் கொண்டு தன் கண்முன் இருக்கிற உருவை உள்ளக் கண்ணில் காண்பதற்குச் சற்றே பழக்கம் செய்ய வேண்டும். அப்பழக்கம் முறுகினால் கனவிலும் அவன் திருக்கோலத்தைக் காணலாம். இது மனத்தில் உண்டான பழக்கத்தைச் சார்ந்தது. குழந்தையையும், மனைவியையும், வெளி மனிதர்களையும் கனவில் காண்பதற்கு நமக்குத் தகுதி இருக்கிறது. ஆனால் இறை வனைக் காண்பதற்கு அத்தகைய தகுதி உண்டாவதில்லை. யாரேனும் மிகவும் அன்பு உடையவர்கள் இறந்து போனால் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறோம். அதனுடைய பயனாக நம்முடைய நனவிலும், கனவிலும் அவர்களுடைய உருவம் அடிக்கடி தோன்றுகிறது. இதற்குக் காரணம் அவர் களுக்கு நம்மிடத்திலுள்ள அன்பு என்று சொல்வார்கள். உண்மை யான காரணம் நமக்கு அவர்களிடத்தில் உள்ள அன்புதான். அந்த அன்பு எவ்வளவுக்கெவ்வளவு உரமாக இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய உருவம் நம்முடைய கனவில் வந்து நிற்கும். இது மனிதன் தன்னுடைய அநுபவத்தில் காண்பது. இது போலவே எம்பெருமானுடைய திருக்கோலத்தைக் கண்ணாலே கண்டு, மீதூர்ந்த காதலினால் நெஞ்சத்தில் வைத்துத் 112