பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'பொய்ந்நின்ற நெஞ்சிற் கொடியாள் புகுந்தாளை நோக்கி நெய்ந்நின்ற கூர்வாளவன் நேருற நோக்கி நங்காய் மைந்நின்ற வாட்கண் மயில்நின்றென வந்தென் முன்னர் இந்நின்றவ ளாங்கொ லியம்பிய சீதை என்றான்.” சூர்ப்பனகைக்கு எப்போதும் இராமனுடைய நினைவாகவே இருக் கிறது. இராவணனுக்குச் சீதையிடத்தில் உள்ள ஆசை எத்தனை வலியதோ, அத்தனை வலியது சூர்ப்பனகைக்கு இராமன்பால் உள்ள ஆசை. இராவணன் தான் கண்ட உருவெளித் தோற்றத்தைக் காட்டி, 'இவள்தானே சீதை' என்று கேட்டபோது சூர்ப் பனகை பார்க்கிறாள். அவளுக்கு அங்கே சீதை தோன்றவில்லை; இராமன்தான் தோன்றுகிறான். உடனே அவள் வியப்புமீதுர்ந்து, 'இவன்தான் அந்த வல்வில் இராமன்' என்கிறாள். "செந்தா மரைக்கண்ணொடுஞ் செங்கனி வாயி னோடும் சந்தார் தடந்தோளொடுந் தாழ்தடக் கைக ளோடும் அந்தா ரகலத்தொடு மஞ்சனக் குன்ற மென்ன வந்தா னிவனாகுமல் வல்வில் இராம னென்றாள்.' வெறும் காமிகளுக்கே மனக்கண்ணிலும் புறத்திலும் அவர்கள் நினைத்த உருவம் தோற்றுமானால், இறைவன்பால் எல்லை இல்லா அன்பு கொண்ட பக்தர்களுக்குத் தோற்றுவதற்குத் தடை என்ன? மனம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். பக்தி உணர்ச்சி மிக்கவர்கள் இறைவனுடைய தியானத்தினால் அவன் திருக்கோலத்தை நினைத்த இடம் எல்லாம் காண்பதற்குரிய நிலையை அடைவார்கள். எங்கே நினைப்பினும் "எங்கே நினைப்பினும் அங்கே வந்து என்முன் எதிர் நிற்பனே! என்று பிறிதோர் இடத்தில் அருணகிரியார் பேசுகிறார். தேவி பக்தர் ஆகிய அபிராமிபட்டர், 'பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே” தோன்றும் என்று பாடுகிறார். 14,