பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் குமரேசன் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் சிலம்பு முதலிய வற்றை அணிந்த தாள் உடையவனாக இருக்கிறான், அவற்றை நினைந்து நாளுக்கு அஞ்சாமல் பக்தர்கள் இருக்க வேண்டுமென் பதற்காக. ஆறு முகத் திருக்கோலம் கொள்கிறான், வினைக்கு அஞ்சாமல் இருக்க, பன்னிரு தோளும் கடம்பும் உடையவனாக விளங்குகிறான், கோளுக்கு அஞ்சாமல் இருக்க தோளும், முகமும், தாளும் ஒருசேர விளங்கும் கோலம் கொண்டு வரு கிறான் கொடும் கூற்றுவனுக்கு அஞ்சாமல் இருக்க நாள்என் செயும்வினை தான்என் செயும்.எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங் கூற்றென்-செபும்கும் ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே, இருபத்தேழு இந்தப் பாட்டில் எனக்கு நயம் ஒன்று தோன்றுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களில் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள். நட்சத்திரத்தைத் தெரிந்து கொண்டே கிரகங்களின் சஞ்சாரத்தை அறிந்து நல்லதையும், தீயதையும் சொல்வார்கள் சோதிடர்கள். இந்தப் பாட்டில் இருபத்தேழு பொருள்களைச் சொல்லியிருக் கிறார் அருணகிரியார், இரண்டு தாள், இரண்டு சிலம்பு, இரண்டு சதங்கை, இரண்டு தண்டை ஆகத் தாளுடன் சேர்ந்த பொருள் எட்டு. முகம் ஆறு. தோள்கள் பன்னிரண்டு. கடம்ப மாலை ஒன்று. ஆக இந்த இருபத்தேழு பொருள்களை நினைப்பாருக்கு இருபத் தேழு நட்சத்திரங்களால் வரும் தீங்கும், அவற்றினுடைய தொடர் பால் கிரகங்கள் விளைக்கும் தீமையும், அவற்றைக் கருவியாகக் கொண்டு வினையால் நேரும் விளைவும் அச்சத்தைத் தாரா. வினையைக் கொன்றுவிடலாம் என்று சொல்லவில்லை. இறை வனைத் தியானிப்பவர்களுக்கு வினையை வென்றுவிடும் நிலை உண்டாக்கும் ★ நாள்என் செயும்,வினை தான்என் செயும்,எனை நாடிவந்த கோள்ளன் செயும்,கொடுங் கூற்றென் செயும்,கும ரேசர்இரு 14.5