பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 'அவன் கால் பட்டு அழிந்தது என்தலைமேல் அயன் கை யெழுத்தே" என்றும் தாம் பெற்ற நிலையைப் புலப்படுத்துகிறார். ★ வழக்கம்போல இப்பாடல்களுக்கு விளக்கம் கூறும்போது வெறும் சொற்பொருளையோ, சிறப்புரையையோ கூறுவதோடு நான் நிறுத்துவதில்லை. சொற்பொழிவாதலின் அங்கங்கே வரும் கருத்துக்கு விளக்கமும், வரலாறுகளுக்கு விளக்கமும், உட் கருத்தும், பழைய மரபும் சொல்லி வருகிறேன். அருணகிரியாரின் பாடல்களில் இலக்கணப் பிழை உள்ளதென்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். அது சம்பந்தமான என் கருத்தை முதற்பாட்டின் விளக்கத்தில் காணலாம்; அதனைச் சொல்லாமலே பாடலை விளக்கியிருக்கலாம். நூலைப் பாடியவரைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டால் நூலின்பால் மதிப்பு உண்டாகும் என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். அதனால் அத்தகைய கருத்துக்களை இடையிடையே சொல்லி வருகிறேன். சில கருத்துக்களை விளக்கப் பெரிய புராணம், கம்ப ராமாயணம், திருமந்திரம், தேவாரம், திருக்குறள் ஆகியவை உதவுகின்றன. அவற்றிலுள்ள கருத்துக்களையும் பாடல்களையும் சொல்லி விளக்கும்போது பாட்டிலுள்ள கருத்துக்கள் பின்னும் தெளிவடைகின்றன. - வழக்கம்போல அங்கங்கே சில உவமைகளையும், உவமைக் கதைகளையும் இப்புத்தகத்திலும் காணலாம். சில உரையாடல் களைக் கற்பனை செய்து அமைத்துக் கருத்தை விளக்க முயன் றிருக்கிறேன். சொற்பொழிவில் இவை கேட்பாருக்குச் சுவையை உண்டாக்கி ஆவலைத் தூண்டும் இயல்புடையவை. ★ எவ்வளவு பேசினாலும் அதனை அப்படியே சுருக்கெழுத்தில் வடித்துத் தர அன்பர் ரீ அனந்தன் இருக்கிறார். முருகன் திரு வருள்தான் அவரை எனக்கு உதவிபுரிய அனுப்பியிருக்கிறதென்று எண்ணுகிறேன். தேனாம்பேட்டை முருகன் கோயிலைச் சமயச் i23