பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வகையான பொருள்கள் சேர்ந்த இந்தப் பஞ்சாமிருதத்தையும் சுவைக்கிறான். தமிழ்ப் பஞ்சாமிருதம் அருணகிரிநாத சுவாமிகள் செய்திருக்கும் தமிழ்ப் பஞ்சா மிருதம் பழப் பஞ்சாமிருதத்தைவிட ஒரு வகையில் சிறந்தது. அப் பஞ்சாமிருதம் அதிக நாள் இராது. வீட்டில் பண்ணுகிற பஞ்சாமிருதத்தைக் காட்டிலும் பழனியில் பண்ணுகிறது இன்னும் கொஞ்ச நாள் அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அதற்கும் ஒரு கால எல்லை உண்டு. ஆனால் அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டிலே இந்தத் தமிழ்ப் பஞ்சாமிருதத்தைச் செய்தார். இப்போது நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். கந்தர் அலங்காரம் தோன்றி 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதனாலே அது ஊசிப் போய்விட்டதா? இல்லை. அருணகிரியார் பாடிய பாட்டு 500 ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. நாள் ஆக ஆகத்தான் சில பொருள்களுக்கு உரம் ஏறும். அதிக நாள் வாழ்ந்த மரம் வைரம் ஏறியிருக்கும் என்பர். கந்தர் அலங்கார நூல் மக்கள் உள்ளத்தில் வளர வளர, அதன் உள்ளே இருக்கிற அநுபவ உணர்ச்சிகள் எல்லாம் மனத்தில் சேரச் சேர, அதிகமான இன்ப நலங்கள் உண்டாவதைப் பார்க்கிறோம். பக்தருக்கு வாய்த்த பெருமாள் முருகனிடத்தில் ஈடுபடுகின்ற துடிப்பு இக்காலத்தில் மக்களிடத்திலே தோன்றியிருக்கிறது. கலியுகம் முற்ற முற்றக் கலியுகவரதனின் அருள் முற்றத்தானே வேண்டும்? வேதத்தை வேதியர்கள் விட்டார்கள்; வேள்வியை விட்டார்கள். யோகியர்கள் யோகத்தையும் விட்டார்கள். ஞானிகளைக் காண்பதும் அரிதாகி விட்டது. மற்ற மக்கள் எல்லாம் தினப்படி செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் விட்டுவிட்டார்கள். நாட்டிலே பரவி விட்ட கோடி கோடி மாயா சக்திகள் கர்மம், யோகம், ஞானம் முதலிய பலவகையான நெறிகளில் சென்று ஈடுபட முடியாத அவல நிலையை ஏற்படுத்திவிட்டன. இப்படி நாட்டிலே கோளாறுகள் அதிகமாக இருந்தபோதிலும் ஒன்று மாத்திரம் 328