பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அதுதான் பக்தி நெறி. வழுக்கி விழுபவனுக்கு உதவும் கைக்கோலைப் போன்றது பக்தி. குறை பாடுடைய மனிதர்களுக்கு ஏற்றது பக்தி நெறி. குறைபாடுடைய மனிதர்கள் அதிகமாக இருப்பதனாலே பக்தி நெறி இந்தக் காலத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. கண்ணனும் கந்தனும் எங்கே பார்த்தாலும் உலாவுகிறார்கள். போகும் இடந்தோறும் திருப்புகழ்ப் பஜனை, கண்ணன் பஜனை. இந்த இரு குழந்தை களும் விளையாடுகின்ற உலகத்தில் பக்தி யோகம் சிறந்து வளராமலா இருக்கும்? 'பக்திசித்தி காட்டி அத்தர்சித்தம் மீட்ட பக்தருக்கு வாய்த்த பெருமாளே” என்று அருணகிரியார் திருப்புகழில் முருகனைப் பாடுகிறார். 'பக்தியே சித்திக்கு வழிகாட்டி. பக்தி வழியிலே சென்றால் முடிவாகிய சித்தி கிடைக்கிறது என்று புலவர்கள் சொல்லியிருக் கிறார்கள். ஆனால் அருணகிரியார் பக்தியே சித்தியாகி விடும் என்ற எளிய வழியைக் காட்டினவர். எப்போது இவ்வுலகத்தில் பக்தி நெறி விரிவாக இருக்குமோ, எப்போது பக்தர்களின் முயற்சி அதிகமாக இருக்குமோ, அப்போது முருகன் பெருமையும், அடி யார்களின் பெருமையும் அதிகமாகப் பரவும். பக்தி நெறியிலே கந்தனைப் பற்றிக்கொண்டால் அவனை நினைக்க நினைக்க வருவது இன்பம்; சொல்லச் சொல்லப் பெறுவது இன்பம்; தியானம் பண்ணப் பண்ணக் கூடுவது இன்பம். அறிவும் அநுபவமும் உபநிஷத்து, சாஸ்திரம் முதலிய நூல்களை நன்றாகப் படித்து விட்டு, 'ஆத்மா என்பது என்ன? ஆண்டவன் யார்? பரமேசுவர னுடைய குணங்கள் என்ன?’ என்பவற்றைத் தெரிந்து கொள் வதும் அறிவுதான். இது எழுத்துக் கூட்டிப் படிக்கிற குழந்தை களின் அறிவைப் போன்றது. எழுத்துக் கூட்டிப் படித்துவிட்டாலும் குழந்தைக்கு அந்நூலின் சுவையைத் துய்க்க முடியாது. அநுபவம் கலந்த அறிவைப் பெற வேண்டுமானால் முயற்சி பண்ண வேண்டும். முயற்சி செய்ய முற்படும்போது நம் முன்னோர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். அவ்வழிதான் பக்தி நெறி. அநுபவத்தைப் பெறுவதற்கு உரிய நம்பிக்கையை அளித்து, 127