பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அநுபவத்தை உண்டாக்கி, முயற்சி உள்ளவர்கள் அதனால் ஏற்படுகின்ற இன்பத்தைத் துய்க்கும்படி செய்வனவாகிய அரிய பாடல்களின் வரிசையில் அருணகிரியாரின் வாக்குகள் அமைந் திருக்கின்றன; மணிவாசகப் பெருமாள் பாடிய திருவாசகமும், அப்பர் சாமிகள் பாடிய தேவாரமும், அவை போன்ற பிறவும் அத்தகையனவே. ஒருவன் அடைகிற இன்பத்தைப் பார்த்து, நாமும் அதை அடைய வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். இது மனித இயல்பு. ஒருவன் ஒரு செயலைச் செய்து துன்புற்றால் அச்செயலை நாம் செய்யக் கூடாது, செய்தால் நாமும் துன்புறும்படி நேரும் என்று அஞ்சுகிறோம். 2 அருணகிரியார் பாடல்கள் அருணகிரியார் தம்முடைய பாடல்களில் தமக்குத் கிடைத்த இன்ப அநுபவங்களை மாத்திரம் சொல்லியிருந்தாரானால் அவற்றைப் படிக்கும்போது நாம் வியப்படைவதோடு நிற்போம். அவருடைய அநுபவத்தை நாம் பெறாதவர்கள் ஆகையினாலே, 'அப்படி ஏற்படுமா? அது சாத்தியமா?' என்று சில சமயம் யோசனை செய்வோம். ஆனால் அவர் தம்முடைய பாட்டிலே பலவிதமான குறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, "அப்படி இருந்த நான் இத்தகைய இன்பங்களைப் பெறும்படி செய்தாயே!” என்று எம்பெருமானைப் பார்த்துச் சொல்லும்போது, நாமும் அவர் கூறியுள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் உடையவர் களாக இருப்பதனால், 'அடடா, நாமும் அவர் முதலில் இருந்தது போலத்தானே இருக்கிறோம்? அவர் சொல்கிறபடி முருகனை வழிபட்டால் அவர் அநுபவித்த இன்ப நலங்களை நாமும் பெறலாமே!" என்கிற நம்பிக்கை நமக்கு எழுகிறது. முயற்சி செய்ய ஆவலும் எழுகிறது. தோத்திர நூல்களில் இறைவன் புகழ் மாத்திரம் இராது. அர்ச்சனையும் இருக்கும். குறைபாடுகளைச் சொல்லி வருந்து வதும் இருக்கும். சாஸ்திர நூல்களில் இறைவனின் இயல்பும் தத்துவங்களின் இலக்கணமும் இருக்கும். கந்தர் அலங்காரத்திலே 128