பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் உயர்ந்த நிலையில் இருப்பார்களுக்கு ஏற்ற பொருள்களும் இருக்கின்றன. மிகவும் இழிந்த நிலையில் உள்ளவர்களும் மேல் நிலைக்குப் போவதற்கான வழிகளும் இருக்கின்றன. அருணகிரியாரின் பாடல்கள் அற்புதமான கண்ணாடியாக அமைந்திருக்கின்றன. அந்த கண்ணாடி ஒரே சமயத்தில் நமக்கு முருகப் பெருமானையும் காட்டுகிறது. நமது அலங்கோல வாழ் வையும் காட்டுகிறது. அருள் பெறாமல் அவல நிலையில் உழன்றுகொண்டிருக்கும் நம்மையும் காட்டி, அருள் வழங்கும் வள்ளற்பிரானாகிய முருகனையும் காட்டுகிற அருணகிரியாரின் தோத்திரப் பாடல்கள் சாஸ்திரத்தில் உள்ள உண்மையையும் நமக்குப் புலப்படுத்துகின்றன. வெறும் சாஸ்திர அறிவு வெறும் சாஸ்திரம் மாத்திரம் படித்தவன் பூகோள ஆசிரியரைப் போன்றவன். அமெரிக்காவுக்குப் போகாமலேயே அமெரிக்காக் கண்டத்தைப் பற்றியும், அதில் ஓடுகின்ற நதிகள், அங்குள்ள மலைகள் முதலியவற்றைப் பற்றியும் பூகோளப் புத்தகத்தில் படித்துவிட்டுப் பலருக்குச் சொல்லிக் கொடுக்கிறார் பூகோள ஆசிரியர். பூகோளம் கற்காமலேயே அமெரிக்காவிற்குச் சென்று அங்கே உள்ளவற்றை எல்லாம் நேரிலே பார்த்து வந்தவன் ஒருவன் பூகோள ஆசிரியரிடம், 'ஐயா, நான் அமெரிக் காவிலுள்ள வாஷிங்டன் நகரைப் பார்த்தேன். அமேசான் நதியைப் பார்த் தேன்” என்று சொன்னால், "ஆமாம், ஆமாம். அமெரிக்காவில் அவை இருப்பதாகத்தான் பூகோள புத்தகம் சொல்கிறது. நீ சொல்வது உண்மை. அவற்றை நீ நேரிலேயே பார்த்தாயா?" என்று சொல் வார். அப்படி அருணகிரியாரின் வாக்குகளின் மூலம் புலனா கின்ற அநுபவ உண்மைகளினூடே சாத்திரக் கருத்துக்கள் இருக் கின்றன. அமெரிக்காவுக்குப் போகாத ஒருவனுக்குப் பூகோள புத்தகத்திலுள்ள அறிவு இருக்கும். ஆனால் அதில் இருக்கிற தப்பைத் திருத்த முடியாது. அமெரிக்காவுக்கு நேரிலே போய் வந்தவனோ பூகோள புத்தகத்தைப் பார்க்காமலேயே உண்மையை உணர முடியும். அதில் பிழை இருந்தாலும் திருத்த முடியும். வேத சாஸ்திரங்களைக் காட்டிலும், தமிழ் வேதமாகிய தோத்திரங்கள் சிறந்தவை என்று சொல்வதற்குக் காரணம் இது 129