பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே! கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே!” 'ஆண்டவனே, என்ன ஆச்சரியம்! தயிர் கடையும் பழைய கயிறு ஒன்றினாலே யசோதை உன் இரு கைகளையும் கட்டி விட்டாளே. அந்தக் கடை கயிற்றுக்குக் கட்டுப்பட்டவை பண்டொரு நாள் கடலைக் கலக்கினாயே, அந்தக் கைகளா? வடவரையாகிய மந்தரத்தை மத்தாகக் கொண்டு, வாசுகியைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கலக்கிய கை இன்று யசோதையின் கடை கயிற்றுக்குக் கட்டுப்பட்டன என்றால் நம்ப முடியுமா? இது என்ன மாயமோ?' என்று வியப்பு அடைகிறார் இளங்கோவடி கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியருடைய குரவைக் கூத்தை வருணிக்கும் வாயிலாக இந்தப் பாட்டு வெளிப்படுகிறது. தேவர்கள் அமிருதத்தைச் சாப்பிட்டு விட்டதனாலே தங்களுக்கு இனி மரணம் இல்லை என்று தலை தருக்கி நின்றார்கள். அவர் களுடைய செருக்கு அதிகமாகிவிட்டது. அவர்கள் அமிருதம் சாப்பிட்டதால் பூர்ண ஆயுளோடு வாழ்ந்தார்களே தவிர, அழி வில்லாமல் நிலையாக இருக்கவில்லை. அவர்களை அழிக்கச் சூரன் தோன்றியவுடன் எத்தனைபேர் மாண்டிருக்கிறார்கள் மிருத் என்றால் மரணம். அமிருதம் என்றால் மரணத்தை நீக்குவது என்று பொருள். அற்ப ஆயுசு இல்லாமல் பூரண ஆயுசோடு வாழவைக்கும் அமிருதத்தை தேவர்களுக்கு வழங்கினார் திருமால். வெற்பு நட்டுஉரக பதித்தாம்பு வாங்கிநின்று அம்பரம் பம்பரம் பட்டுஉழல மதித்தான். அருளமுதம் திருமாலின் மருமகனாகிய முருகன் என்ன பண்ணுகிறான் தெரியுமா? அருளாகிய அமிருதத்தைத் தன் அடியார்களுக்கு வழங்குகிறான். திருமால் வழங்கிய அமிருதம் இடைக்காலத்தில் வருகின்ற மரணத்தைத்தான் நீக்கிற்று. ஆனால் அவருடைய மருகன் வழங்கும் அருளாகிய அமிருதம் கடைக் காலத்தில் வரு 136