பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் உழன்று திரிகிற மனம் நிலைக்க வேண்டும். மனம் நிலைக்கின்ற தன்மையே நமக்கு வரவில்லையே! மூன்று தொழில் பிறக்கிறோம், உழல்கிறோம், சாகிறோம். பிறந்து பிறந்து உழன்று சாகிற நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றே ஆண்டவன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான். நாம் செய்கிற பாவங்களினாலே பிறக்கிறோம். பிறந்து உழல்கிறோம். உழன்று உழன்று இறக்கிறோம். பிறந்து உழன்று இறக்கிற நம்மை ஒழுங்குபடுத்த அவன் மூன்று மூர்த்திகளை நியமித்திருக் கிறான். ஒரு ஜில்லாக் கலெக்டருக்குக் கீழே இரண்டு மூன்று டெபுடி கலெக்டர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்வது இல்லையா? அப்படிப் பிறப்புக்களை ஒழுங்குபடுத்தப் பிரம்மா, உழல்வதை ஒழுங்குப்படுத்த விஷ்ணு, இறப்பதைச் சரிக்கட்ட ருத்திரன் ஆக மூன்று மூர்த்திகள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணமே நம்முடைய பாவங்கள் தாம். 'நீ வேறு, நான் வேறு' என்று வேறுபடுத்திப் பார்க்கும் வரையில் மனம் ஒரு நிலைப்படாமல் திரிந்து கொண்டே இருக் கிறது. என்றைக்கு, 'நீ வேறு அல்ல, நான் வேறு அல்ல' என்னும் மனோபாவம் வருகிறதோ அப்போது மனம் ஒன்றுபடுகிறது. நம் மனம் எந்த நிலையில் நின்று ஒன்றுபட்டாலும் அந்த நிலைக்கு இறங்கி நமக்கு அருள் செய்ய எம்பெருமான் ஒடோடி யும் வருவான். இறைவன் இறங்கி வருதல் நமக்குத் தனிப்பட்ட ஆற்றல் இருந்தால்தான் எம் பெருமான் இருக்கும் நிலையை அடையமுடியும். அது மிகவும் அரிது. இறைவனே பெருங்கருணையால் நாம் இருக்கும் நிலைக்கு இறங்கி வருகிறான். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதப் பெருமான் பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தார் என்று ஒரு திருவிளை யாடல் உண்டு. பன்றி ஒன்று குட்டிகளை ஈன்று இறந்து விட்டது. தாயின் பிரிவைச் சகிக்க மாட்டாமல் கதறிய பன்றிக் குட்டி 139