பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் காலம் உண்டோ? 'அப்பனே, இதோ கையை நீட்டுகிறேன். கொஞ்சம் பாரேன். நானும் பிறந்து, உழன்று, இறந்து கொண்டிருக்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான் அப்பா. உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எல்லோரையும் ஆண்டு கொள்ளும் வள்ளலே, எனக்கு உன் அருள் கிடைக்குமா? கிடைக்குமானால் அது எந்தக் காலம் என்று கொஞ்சம் சொல்லமாட்டாயா என்று கேட்பதைப் போல இந்தப் பாட்டிலே பாடுகிறார். மரத்தடியில் உட்கார்ந் திருக்கும் சோதிடனிடத்தில் கை நீட்டிப் பலன் கேட்பவரைப் போலக் கேட்கிறார். உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்தெனை உன்னிலொன்று விதித்து ஆண்டு அருள் தரும் காலம் உண்டோ? 'நீ வந்து என்னை ஆண்டருள மாட்டாயா?" எனக் கேட்க வில்லை. அவன் அருள் கிடைக்க வேண்டுமென்றால் நமக்கு நல்ல காலம் வரவேண்டுமே; மனப் பக்குவம் ஏற்பட வேண்டுமே” என்று எண்ணி, "நீ வந்து ஆண்டருளும் காலம் எனக்கு உண்டா அப்பா?' என்று கேட்கிறார். அவன் அருளாகிய அமிருதத்தை வழங்குவான் என்று அருணகிரிநாதருக்குத் தெரியும். காரணம் அவன் எந்தக் குடும்பத் தில் வந்திருக்கிறான்? - வெற்பு நட்டு உரக பதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் ஆகிய திருமாலுக்கு மருகன் அவன். வெற்பு நட்டு. மேருகிரியாகிய மலையைப் பாற்கடலுக்குள் நட்டு மத்தாக வைத்துக் கொண்டார்கள். உரகபதித் தாம்பு வாங்கி நின்று. உரகபதி - நாகங்களுக்குத் தலைவன். ஆதிசேஷன் என்பாரும் உண்டு; வாசுகி என்பாரும் உண்டு. பாம்புகளுக்குத் தலை வனாகிய வாசுகியைக் கயிறாக வாங்கி இழுத்தார்கள். 141