பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 மாத்திரம் அல்ல. 'மேரு மலையை மத்தாகக் கொண்டு, வாசுகியைத் தாம்பாக வைத்து, அம்பரம் பம்பரம் பட்டுழலப் பாற்கடலைக் கடைந்தவனுடைய மருகன் நீ" என்று சொல்லும் போதே, "மாமாவைப் போல நீயும் எனக்கு அமிருதம் வழங்கத் தான் வேண்டும்; உன் அருளாகிய அமிருதத்தை வழங்கு' என்று கேட்பதாகவே ஆகும். மாணிக்கம் பாற்கடலைக் கடைந்த திருமாலுடைய மருகன் எப்படி இருக்கிறான்? மயில் ஏறிய மாணிக்கமே! சாவுக்குக் காரணமான விஷத்தைப் போக்க அமிருதத்தை உண்ண வேண்டும். விஷத்தைத் தருவது பாம்பு. அதற்கு விரோதி கருடனும், மயிலும். மயில் மேல் எழுந்தருளியிருக்கும் முருக வேளின் திருவுருவப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களே; அப் படங்களில் எம்பெருமான் வாகனமாகிய மயில் தன் காலின் கீழே பாம்பை மிதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நஞ்சு தரும் பாம்பை மயில் மிதித்துக் கொண்டிருக்கிறது. எம்பெரு மானின் திருவடி படவேண்டும் என்பதுகூட இல்லை. எம்பெரு மானின் வாகனமாகிய மயிலின் அடி பட்டாலே போதும்; நஞ்சு கக்கும் பாம்பு சுருண்டு தன் ஆற்றலை இழந்து விடுகிறது. ஐந்து தலைகளை உடையது அந்த நாகம். மனம் என்பதும் ஒரு நாகந்தான். ஐந்து பொறிகளாகிய தலைகளை உடையது அது. அது நஞ்சைக் கக்குகிறது. ஐந்து தலைகளாகிய ஐந்து இந்திரி யங்களை வைத்துக் கொண்டு இந்த நாகம் ஆகிய மனசு நஞ்சைக் கக்குகிறது. அதனால் துன்பம் உண்டாகிறது. l நாகமும் நஞ்சும் நாகம் நஞ்சை மாத்திரம் கக்காது. மாணிக்கமும் அதனிடத் திலிருந்துதான் உண்டாகிறது. நாகம் நஞ்சைக் கக்காமல் நெடுங் காலம் பாதுகாத்து வைத்திருந்தால் அந்த நஞ்சே, இறுகி மாணிக்க மாகிறது என்று சொல்வார்கள். நமது மனமாகிய நாகமும், ஐந்து இந்திரியங்களின் வழியாக நஞ்சைக் கக்காமல் இருந்தால், நஞ்சே 144