பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் மாணிக்கமாகிறது. நமது மனம் நமக்குத் தீங்கு விளைப்பதற்கு மாறாக நன்மையையே உண்டாக்கும். நஞ்சைக் கக்கும் நிலையில் இருந்தால் நெஞ்சு பொல்லாததாக இருக்கும். ஐந்து பொறி களாகிய வாயின் வழியே நஞ்சைக் கக்காமல், உள்ளே அதையே மாணிக்கமாக இறுக வைத்து விட்டால் நம் நெஞ்சே நமக்கு நல்லதாக இருக்கும். ஐந்து தலை நாகத்தை நஞ்சு கக்காமல் அமிழ்த்தி வைத்திருப்பது மயில். உலகத்தின் மாயையிலே சிக்கி, மையல்பட்டு, ஐந்து தலைகளாகிய ஐந்து பொறிகளின் வாயிலாக நஞ்சைக் கக்காமல் மனமான நாகம் அமிழ்ந்து கிடக்கும்படியாக எம்பெருமானின் மயில் வாகனம் நம் உள்ளத்திலே வந்து விட்டால் போதும். நஞ்சு கக்குகின்ற இடமாகிய மனத்திலேயே மாணிக்கமாகிய முருகன் வந்து விடுவான். மயில் கீழே பார்க்க வேண்டாம். பார்த்தால் மயிலின் காலடியில் சிக்கிக் கிடக்கின்ற பாம்பின் படத்தைக் கண்டு பயம் தோன்றும். நிமிர்ந்து நேரே பார். நீலவண்ண மயில் தோன்றும். உன் பார்வை ஆரோகண கதியில் செல்லட்டும். மறுபடி மேலே பார். நீலவண்ணத்துக்கு மேலே செக்கச்செவேல் என்று ஒளிவிடுகின்ற மாணிக்கம் தோன்றும். பச்சை வண்ணத்துக்கு மேலே தெரிகின்ற மாணிக்கத்தின் பெருமையை, கருணை மிகுதியை, பச்சை வண்ண முடைய மயிலே உனக்குத் தெரிவிக்குமே! 'எம் பெருமானுக்கு விரோதியாகிய சூரனாக நான் இருந்தேன். எம்பெருமானை எதிர்த்தே போரிட்டேன். இருந்தும் அந்த மாணிக்கப் பெருமான் தன்னுடைய கருணை மிகுதியாலே என்னை ஆட்கொண்டு விளங்க வைத்தார்; என்னை அழிக்க வில்லை பார்' என்று அது சொல்லுமே. அத்தகைய மயிலேறிய மாணிக்கத்தைப் பார்த்து, 'என்னை உன்னோடு சேர்த்துக் கொள்ளும் காலம் உண்டோ?” என்று கேட்கிறார் அருணை முனிவர். உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்தெனை உன்னில்ஒன்றா விதித்துஆண்டு அருள்தரும் காலம்உண் டோவெற்பு நட்டுஉரக 145