பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து இறைவனுடைய திருவருட் பெருமையை மக்கள் எல்லோரும் உணர்வதற்கு, அவனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருளச் செய்வது உலகினர் வழக்கம். உள்ளே இருக்கிற சிறிய மூர்த்திக்கு எவ்வளவு பெரிய கோயில்களை இந்த நாட்டில் கட்டியிருக்கிறார் கள் வாகனம், தேர் முதலியவைகளின் மேல் ஆண்டவனுக்கு மிக்க அலங்காரம் பண்ணி ஊர்வலமாக எழுந்தருளச் செய்வதும் மக்களுடைய உள்ளத்தை அவன் பக்கம் ஈர்க்க வேண்டுமென்பதற் காகச் செய்யும் விளம்பரமே. பொருள் எத்தனை உயர்வுடைய தாக இருந்தாலும் அதற்கும் விளம்பரம் வேண்டுமென்ற யுகத்தில் நாம் இன்று வாழ்கிறோம். பொல்லாத சரக்குகளுக்குக்கூடப் பெரிய விளம்பரங்கள் செய்து நம்மை மதி மயங்க அடித்து விடுகிறார்கள், இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் பழங் காலத்தில் நல்ல பொருள்களுக்குத்தான் விளம்பரம் செய்தார்கள். எல்லோரும் அவற்றை நுகர வேண்டுமென்ற நினைப்பினால், 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று விளம்பரம் செய்தார்கள். இறைவனுக்கு உருவம் கொடுத்து, அவ்வுருவம் நம் மனதில் நன்றாகப் பதிய வேண்டுமென்ற கருத்தோடு அலங்காரம் செய்து காட்டினார்கள். தம் பெண்ணை நல்ல மாப்பிள்ளை கைக்கொள்ள வேண்டுமென்ற கருத்தால் நல்ல நல்ல அபரணங் களால் அலங்காரம் செய்து நிறுத்தும் தாயைப் போல, ஆண்ட வனுடைய திருவருளினால் இன்ப அநுபவங்களைப் பெற்ற நம் நாட்டுப் பெரியோர்கள் மற்றவர்களும் அவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு இன்பங்களைத் துய்க்க வேண்டுமென்ற பேராவலோடு அவனுக்கு அலங்காரம் செய்தார்கள். பா அலங்காரம் அப்படிப் பண்ணுகிற அலங்காரங்கள் சில காலமே இருக் கும். மலர், ஆடை, நகை முதலியவைகள் எல்லாம் ஒரு கால