பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பிள்ளைத் தமிழிலே ஆண்பாலைப் பற்றிச் சொல்லும் போது சிற்றில் பருவம் என்று ஒரு பருவம் வரும். கிராமங்களிலே உள்ள தெருக்களில், கார் வராத வீதியில், தார் போடாத திரு வீதியில், சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். இளமைப் பருவத்தில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தை களும் சேர்ந்து விளையாடினாலும் அந்த விளையாட்டிலும், ஆணுக்கு ஆணின் இயல்பும், பெண்ணுக்குப் பெண்ணின் இயல்பும் வெளிப்படுவதைப் பார்க்கலாம். வீதியிலே கிடக்கும் மண்ணைப் பெண் குழந்தைகள் சிறு சிறு செப்புகளிலே எடுத்து வைத்துக் கொண்டு சோறு சமைப்பதாகவும், அந்தச் சோற்றைத் தன் கணவனுக்கும் குழந்தைக்கும் போடுவதாகவும் பாவித்து விளையாடும். இது பெண் குழந்தைகளுடைய இயற்கை. வீடு கட்டுவதும் அப்படித்தான். மண்ணைக் குவித்து வீடாகக் கட்டி அதற்குத் தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு மணற் சோறு ஆக்கும். அக்குழந்தைக்குக் கணவனாக இருந்து விளையாடும் ஆண் பிள்ளை, பொருள் சேகரித்து வர வெளியே போகிறவனைப் போல அப்பால் சென்று நிற்பான். திடீர் என்று ஒடி வந்து தன்னுடைய காலினாலே அப்பெண் குழந்தை கட்டியிருக்கும் மணல் வீட்டைச் சிதைப்பான். 'டேய், டேய், இந்தச் சிற்றிலைச் சிதைக்காதேயடா’ என்று சொல்வாள் பெண் குழந்தை. அப்படிச் சொல்வது போன்ற பாவனையில், "அடியேம் சிற்றில் சிதையேவே' என்று பாடிச் சிற்றில் பருவத்தை அமைப்பார்கள். காலால் அழித்தல் இந்தச் சிற்றிற் பருவம் அருணகிரியாருக்கு நினைவு வந்தது. மற்றக் குழந்தைகள் எல்லாம் பாதையில் இருக்கிற சிற்றிலைச் சிதைப்பார்கள். முருகப் பெருமானோ உயிருக்கு இல்லாகிய உடம்பை வராமல் செய்து பிறப்பையே அழித்து விடுகிறவன். அவன் ஒன்றை அழித்து விளையாடுகிறவன். எதை அழிக் கிறான்? மண்டை ஒட்டின் மேல் எழுதப்பட்ட எழுத்தை அழிக் கிறானாம். மற்றக் குழந்தைகள் பெண்களின் உள்ளத்திலே கவலை உண்டாக்குவது போல அவன் அழிக்கவில்லை. கவலைப் படுகிற மக்களின் துன்பங்களுக்குக் காரணமான தலை எழுத்தையே அழித்து, முத்தி இன்பத்தை வழங்குகிறான். 15○