பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து அவன் கால்பட்டு அழிந்ததுஇங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே என்று பாடுகிறார். எழுதின பிள்ளை தலையின்மேலே எழுதித் தொலைக்கின்ற அந்த அயன் யார்? திருமாலின் பிள்ளை. 'திருமாலின் பிள்ளையாகிய அயன் என் தலைமேலே கையால் எழுதிய எழுத்தைச் சிவபெருமான் பிள்ளையாகிய முருகன் தன் காலால் அழித்து விட்டான். ஒரு பிள்ளை கையாலே எழுதிய எழுத்தை இந்தப் பிள்ளை காலாலே அழித்தான்' என்று சொல்கிறார் அருணகிரியார். ஒரு வைஷ்ணவப் பக்தர் திருமாலிருஞ் சோலைமலையில் உள்ள திருமாலிடத்தில் முறையிட்டுக் கொள்கிறார். 'அழகா, உன் பிள்ளை பண்ணுகிற அக்கிரமம் சொல்லொணாதது. உன் குடும்பத்திலே ஒரு மகனாகப் பிறந்து, நாலு தலை படைத்திருக் கிறானே, அவனுக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்க வேண்டாமா? உன் குடும்பத்திலே பிறந்த மகிமையினாலே எல்லா வேதங் களையும் சொல்கிறான். இருந்தும் அவன் என்ன பண்ணுகிறான் தெரியுமா?’ என்று சொல்ல ஆரம்பிக்கிறார். நம் வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. அது நன்றாகப் படிக்க வேண்டுமென்று பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்கிறோம். பலகை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடத்தைப் பலகையிலே எழுதினால் நமக்குக் குழந்தையிடம் ஆசை வளர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை கரித் துண்டை. எடுத்துக் கொண்டு சுவரிலே எழுதினால் நமக்குக் கோபந்தான் வரும். அதைப் போலப் பிரமா என்ற குழந்தை இருக்கிறதாக அந்த பக்தர் அழகரிடம் முறையிடுகிறார். "அழகா, உன் பிள்ளை பண்ணுகிற அக்கிரமத்தைப் பார்த்தாயா? மென்மையான இடத் திலே அரி என்று எழுதத் தெரியவில்லை. வன்மையான இடத் தில் எது எதையோ கிறுக்கித் தள்ளுகிறானே. இது நியாயமா?" என்று கேட்கிறார். க.சொ.111-11 宝51