பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து ஏட்டிலே எழுதக் கூடாதா?’ என்று வேறு ஒரு பொருள் தோன்று கிறது. "ஒட்டிலே எழுதாமல், ஏட்டிலே அரி என்று அரிச்சுவடி எழுதக்கூட உன் பிள்ளைக்குச் சமர்த்து இல்லையே! என்று முறையிடுகிறார். 'மலைக்குமேல் மலைவிளக்காம் அழகா வேத வான்குதலை நான்குதலை மகனார் வாளா தலைக்குமேல் எழுதுகின்றார் அரியென் றெங்கள் தாலத்தின் மேல்எழுதச் சமர்த்தி லாரோ?" வாளா என்பதற்கும் இரண்டு பொருள் உண்டு. சும்மா என்றும் வாளைப் போலத் துன்புறுத்த என்றும் இரண்டு பொருள் கொள்ளலாம். 'ஒரு பயனும் இல்லாமல் சும்மாதலையிலே எழுது கிறானே' என்பது ஒரு பொருள். 'வாளைப்போல எங்களுக்குத் துன்பத்தைத் தர எழுதுகிறானே' என்பது மற்றொரு பொருள். தலை எழுத்து என்கிற விவகாரம் எப்போது வருகிறது என்று பாருங்கள். நமக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது; அல்லது நம் குழந்தை பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறான். 'எல்லாம் என் தலை எழுத்து' என்று யாராவது சொல்வார்களா? தேர்தலுக்கு நிற்கிறார். லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறார். தோற்றுப் போகிறார். என்ன சொல்கிறார்? 'எல்லாம் தலை எழுத்து' என்கிறார். நல்லது, கெட்டது எல்லாமே தலை எழுத்தினால்தான் விளைகின்றன என்றாலும் தலை எழுத்தைச் சொல்லும்போது துன்பங்களையே நினைப்ப்து வழக்கமாகி விட்டது. தலை எழுத்து அழிந்தது எல்லாத் துன்பங்களும் தலை எழுத்தால்தான் உண்டா கின்றன. தலை எழுத்தையோ மாற்ற முடியாது என்று சொல் கிறார்கள். அந்தத் தலை எழுத்துக்கு உட்பட்ட மக்களால் மாற்ற முடியாது. ஆனால் தலையிலே எழுதுகிறவனுடைய தலையிலேயே ஒரு குட்டுக் குட்டி அடையாளம் பண்ணின ஆண்டவனுக்கா தலை எழுத்தை மாற்ற முடியாது? 'அவன் என் தலை எழுத்தை அழித்து விட்டான்' என்கிறார் அருணகிரியார். 'இங்கு, வன்மையான என்னுடைய தலைமேல் அயன் அழுத்தி எழுதிய கையெழுத்து என்ன ஆயிற்றுத் தெரியுமா? எம் 153