பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து 'கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என வள்ளுவர் சொன்னாரே அதுபோல, நான் எம்பெருமான் தாள் தலையில் படும்படியாக அவன் முன்னர்ப் பணிந்து நின்றேன்' என்று சொல்லாமற் சொல்கிறார். அவன் தாள் படவேண்டுமானால் நம் சென்னி தாழ்ந்து கிடக்கத்தானே வேண்டும்? நிமிர்ந்து நின்றால் அவன் தாள் படாது. அவன் நடமாடுகின்ற தளமாக நம் தலையைத் தாழ்த்தி நின்றால் அவன் திருவடியை வைப்பான். அவன் திருவடி மலர் நம் தலைமேலே பட்டால், முன்னாலே அயன் எழுதி வைத்த தலை எழுத்து அழிந்து போகும் என்ற உண்மையும் புலனாகிறது. கடையில் அடியில் அப்பெருமான் அருளினாலே தமக்கு இனிப் பிறவி இல்லை என்கிற கருத்தை விளக்கினார். இந்தக் கருத்துக்கு நிலைக்களமாக முதல் மூன்று அடிகளை அமைக்கிறார். அழகான ஏழு நிலைக்கோபுரம் போல நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பாட்டு. நான்கு அடிப்பாட்டுக்குள்ளே திருச்செந்துருக்கு நாட்டுப் படலம், நகரப்படலம் எல்லா வற்றையும் சொல்லிவிடுகிறார். 3 அழிவும் ஆக்கமும் 'அவன் கால்பட்டு அழிந்தது எனச் சொல்கிறாரே; அழிவு இன்பத்தைக் கொடுக்குமா?' என்று கேட்கலாம். அழிவு, ஆக்கம் என்ற இரண்டில் அழிவு என்பது துன்பத்தை அளிப்பதாகவும், ஆக்கம் என்பது இன்பத்தைத் தருவதாகவும் கொள்கிறோம். ஆனால் அழிவு என்று சொன்னமாத்திரத்திலேயே துன்பம் ஆகாது. ஒருவனுக்கு நோய் வந்தது. மருந்தைக் கொடுத்து மருத்துவன் நோயை அழிக்கிறான். அதனால் சுகம் ஏற்படுகிறது. காரணம் என்ன? முதலிலே நோய் வந்து அவன் உடம்பின் சுகத்தை அழித்தது. மருத்துவன் மருந்தைக் கொடுத்து நோயை அழிக்கிறான். இரண்டு அழிவு சேர்ந்தால் நலந்தானே? உடலை அழித்து வந்த நோய், மருந்தால் அழிந்த போது நலம் உண்டா 155