பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து காப்பாற்றுகின்ற வயல்களைக் காப்பாற்ற வேண்டுமே என்று எண்ணியவை போலச் சேல் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அப்படிக் குதிக்கும்போது வயலருகில் உள்ள பொழில்கள் அழிகின்றன. வயல்களுக்கு நிழல் தரும் பொழில் மரங்களைச் சேல் மீன்கள் சாடுகின்றதனால் அம்மரங்கள் அழிகின்றன. இந்த அழிவினால் நன்மையே விளைகின்றது. நிழல் தந்த மரங்கள் அழிந்ததனால் வயல் இன்னும் வளப்பமாகச் செழிக்கின்றது. தம்மை வளர்த்த வயலுக்கு வந்த இடையூற்றைச் சேல் மீன்கள் நினைத்துச் செய்யாமல் துள்ளி விளையாடுவதனாலே போக்கு கின்றன. இது நாட்டுப் படலம். அடுத்த அடியில் நகரப்படலம் வருகிறது. நகரப்படலம் 2பிருக்குள் புகுந்து எல்லோரையும் வருணிக்க ஆரம்பித்தால் ஒர் அடி போதுமா? எத்தனை விதமான தொழில் புரிபவர்கள் இருக்கிறார்கள் எத்தனை வகை மக்கள் இருக்கிறார்கள் இருக் கிறார்கள்! எல்லோரையும் வருணிக்க முடியாது. நாட்டைச் சொல்லிவிட்டு நகரைச் சொல்லாமல் விடலாமா? ஒரு நகரத்தில் பல வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வீடும் நாட்டின் ஒர் அங்கம். நகரத்தை வருணிக்க ஒரு வீட்டைச் சொன்னால் போதாதா? அப்படியே ஒரு வீட்டைச் சொல்லலாம் என்றாலும் ஒரு வீட்டில் பத்துப்பேர்கள் இருப்பார்களே! தாய், தந்தை, தம்பி, அண்ணன், தங்கை என்று பலபேர்கள் இருக்கின்றபோது எல்லோ ரையும் பற்றிச் சொல்ல முடியுமா? வீட்டுக்குத் தலைவரைப் பற்றிச் சொன்னால் போதும் என்றால் வீட்டுக்குத் தலைவர் யார்? 'வீட்டுக்காரர்தாம்' என்று நாம் இப்போது சொல்வோம். ஆனால் பழங்காலத்தில் தமிழ்நாடு அப்படிச் சொன்னது இல்லை. 'இல்' என்றால் இல்லாள்தான் உண்டு. இல்லான் என்ற வழக்கு இல்லை. இல்லான் என்றால் இல்லத்தின் தலைவன் என்று பொருள்படாமல் ஒன்றும் இல்லாதவன் என்றே பொருள் படும். மனை' என்றால் மனைவி உண்டு, மனையாள் உண்டு. மனையான் என்று கிடையாது. நாட்டுக்கு நாயகன் ஆண்பால், வீட்டுக்கு நாயகி பெண்பால்தான். எல்லாவிதமான பொருளையும் வீட்டுக்குள் கொணர்ந்து சேர்க்கிற பொறுப்பு ஒன்று மட்டும் 157