பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஆடவருக்கு உண்டு. அறம் பிறழாமல் அதை எடுத்துச் செல வழிக்கின்ற கடமை வீட்டுக்குச் சொந்தக்காரியான, இல்லுக்கு அரசியான, இல்லாளுக்குத்தான் உண்டு. ஆகவே இல் அரசியை வருணித்தால், ஒரு வீட்டையே வருணித்ததாக ஆகும், ஒரு வீட்டை வருணித்தால் ஒரு நகரத்தையே வருணித்தாக ஆகும் என்று நினைப்பவர் போல அருணகிரியார் வீட்டுக்கு விளக்காய், வாழ்வரசியராய் விளங்கும் பெண்களைச் சொல்வதுபோல அடுத்த அடியை அமைக்கிறார். தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடி யார்மனம். (பூங்கொடியைப் போன்ற மெல்லியலையுடைய மகளிர்களின் மனம் முருகன் அணிந்த தேன் நிரம்பிய கடம்ப மலரின் மேல் உள்ள ஆசை பட்டு அழிந்தது) திருச்செந்தூரிலே நிறையக் கடம்ப மரங்கள் இருக்கின்றன. அதிலே பூக்கின்ற பூக்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் திருச் செந்தூர் ஆண்டவனுக்கு எடுத்துச் செல்கிறார்கள். கோயிலுக்குள் மாலைகள் போவதைப் பார்க்கிறார்கள், பூங்கொடி போன்ற மகளிர்கள். 'உள்ளே போகின்ற மாலைகள் மீட்டும் வெளியே வர வில்லையே! ஆண்டவனுக்குச் சூட்டிய மாலைகள் எங்களுக்குப் பிரசாதமாகக் கிடைக்கவில்லையே!' என்கிற தாபத்தினால் தேங்கடம்ப மாலைகளின் மீது மால் உண்டாகி, ஆசைப்பட்டுப் பூங்கொடியார் மனம் அழிந்தது. பெண்கள் எம்பெருமானுக்கு அணியும் கடம்ப மலர் மாலை களுக்கு ஏங்கி நிற்கிறார்கள்; அதனாலேயே அவர்கள் மனம் அழிந்தது என்று பொருள்பட்டாலும், இதற்கு ஒர் உட்கருத்து உண்டு. பூங்கொடியார் என்பது உடம்பினாலே பெண்ணாகத் தோன்றுகிறவர்களை மட்டும் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. நாம் உடம்பினாலே பெண் என்றும், ஆண் என்றும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம். உயிரிலே ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. பெண்கள் கல்லூரியில் நாடகம் போடுகிறார்கள். ஆண்களின் பாத்திரத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயகனாகக் கோலம் புனைந்து கொண்டிருக்கும் பெண், நாயகியாக வேஷம் 158