பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து போட்டுக் கொண்டிருப்பவளிடம், "பிராண நாயகியே' என்கிறாள். அவளும், 'என் பிராண நாதா என்கிறாள். நாடகம் முடிந்து இறங்கினால் யார் நாதன்? யார் நாயகி, எல்லோரும் பள்ளிக் கூடத்துப் பெண்கள். அப்படி உலகமாகிய மேடையிலே ஆண் வேஷம் தாங்கி யிருக்கும் ஆன்மாவும் பெண்தான். பெண்ணாக வேஷம் பூண்டுள்ள ஆன்மாவும் பெண்தான். உலகிலுள்ள ஆன்மாக்களாகிய பெண் களுக்கு உண்மையான புருஷன் யார்? அவன்தான் ஆண்டவன். ஒர் அரசன் கொஞ்ச காலம் தலை மறைவாக இருக்கிறான். அந்தச் சமயம் மந்திரியைப் பார்த்து, 'அரசனாக வேஷம் போட்டுக் கொண்டு அரசியலை நடத்தி வா என்று சொல்கிறான். வேஷம் போட்டுக் கொண்ட மந்திரி.தன்னையே உண்மை அரசன் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அவன் அதமனாகிவிடுகிறான். அதுமாதிரி, வேஷம் புனைந்து புருஷனாகத் தோற்றுகிற நாம் எல்லாம், 'நாமே புருஷர்' என்று நினைத்துக் கொண்டிருந்தால் புருஷ அதமராகிறோம். புருஷ உத்தமனாகிய ஆண்டவன் அதைப் பார்த்து நகைக்கிறான். திருச்செந்தூரில் எழுந்தருளியிருக் கும் புருஷோத்தமனாகிய எம்பெருமானை அடைவற்காக, தோற்றத்தால் ஆணாகவும் பெண்ணாகவும் வேஷம் தாங்கியிருந் தாலுங்கூட, எல்லா மக்களும் ஏங்கிப் பூங்கொடியார்களாகத் தவம் கிடக்கிறார்கள். 'இன்னும் மாலை மாற்றிக் கொள்ள வில்லையே! தனக்குச் சூட்டப்படுகின்ற கடம்ப மலர் மாலை களை எடுத்து ஆண்டவன் நம் கழுத்தில் சூட்டவில்லையே!” என்று கடம்ப மலர் மாலைகளுக்கு ஆசைப்பட்டு, விரக தாபத் தினால் தவிக்கின்ற பூங்கொடியாராக இருக்கிறார்கள். அந்த விரக தாபமே ஒர் இன்பம். ஒரு பொருள் கைக்குக் கிடைத்து அதை நுகர்கின்ற காலத்திலே ஏற்படுகின்ற இன்பத்தை விட அந்தப் பொருள் கிடைக்கவில்லையே என்று ஏங்கி நிற்கும் காலத்தில்தான் இன்பம் மிக அதிகமாக இருக்கும். உலகிலுள்ள வேறு எத்தனையோ பொருள்களிடத்தில் மையல் கொண்டு அவை கிடைக்கவில்லையே என்று தாபப்படுகிறவர் களின் மனம் ஆயிரம் ஆயிரமாகச் சிதறிக் கணத்திற்குக் கணம் துணுக்குறுகிறது. ஆனால், "ஆண்டவன் அருள் கிடைக்கவில்லையே! 159