பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இப்படி நாட்டிலும் நகரிலும் அழிவு போன்ற ஆக்கம் நிகழ்ந் ததையும், பழைய காலத்தில் சூரசங்காரத்தின் போது அழிவு போன்ற ஆக்கம் நிகழ்ந்ததையும் சொல்லிவிட்டுத் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்கிறார் அருணகிரிநாதர். அதுவும் அழிவு போன்ற ஆக்கந்தான். அவர் அநுபவம் ண்டவனுடைய வரவுக்காக நான் காத்துக் கிடந்தேன். அவன் நடமாடுகின்ற இடம் எங்கே எனத் தேடி அலைந்தேன். குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென்றால் அவர்கள் விளை யாடும் வீதியில்தான் பார்க்க முடியும். முருகக் குழந்தை எல்லா இடங்களிலும் விளையாடுகிறான் என்றாலும், அடியார்களுடைய கூட்டந்தான் அவனுக்கு அதிக உவப்பானது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குதிக்கிறான். விளையாடுகிறான் அடியார்களின் கூட்டத்தில் நானும் சேர்ந்து நெஞ்சு உருகி, தலைதாழ்த்தி அவன் திருவடிபடாதா என வீழ்ந்து கிடந்தேன். அவன் திருவடி என் தலையிலே பட்டது. அதனாலே என்ன நிகழ்ந்தது தெரியுமா? என் தலைமேலே அயன் எழுதிய தலை எழுத்து அழிந்து போய் விட்டது. பிறவி ஒழிந்தது. பிறப் பற்ற சாசுவதமான இன்பத்தைப் பெற்றேன்' என்று முடிக்கிறார்.

  • *

அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே. அழிந்தது என்று சொன்னாலும் அவை துன்பம் விளைக்கும் அழிவுகள் அல்ல. 'சேல்பட்டுப் பொழில் அழிந்ததனாலே வயல் செழித்தது. பூங்கொடியார் மனம் விரகதாபத்தினால் அழிந்தத னாலே மனமற்ற தூய பரிசுத்த இன்பம் உண்டாயிற்று. வேலை யும் சூரனும் வெற்பும் வேல்பட்டு அழிந்தமையாலே சூரன் மா மயிலானான். தலைமேலுள்ள அயன் கையெழுத்து எம்பெரு மானின் கால்பட்டு அழிந்ததனாலே பிறவி அற்ற முத்தி இன்பம் விளைந்தது” என்கிற கருத்துக்களை இப்பாட்டு மிக அழகாக விளக்குகிறது. நம்முடைய பிறவி அழிய வேண்டுமானால் எம்பெருமானின் திருவடி எப்போது நம் தலையில் படும் என்று ஏங்கி உருகி 162