பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இன்னது என்றே தெரியாமல், வையத்தில் வாழ்வது எப்படி என்பதும் தெரியாமல் வாழ்கின்ற இக்கால மக்களுக்கு வானத்தைப் பற்றி எங்கே நினைப்பு வரும்? வையத்தில் வாழும் வகை இன்னது என்றே தெரியாமல் இவர்கள் என்ன என்னவோ காரியங்களைச் செய்து துன்பப் படுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்சி; ஒவ்வொரு நாளும் ஒரு கட்சி; ஒர் ஊரில் நூறு கட்சிகள் பிளவும் வேற்றுமை யும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. எந்த கொள்கையை யும் பத்து ஆண்டுக்குச் சேர்ந்தால் போலக் கடைப்பிடித்த அரசியல் தலைவர்கள் மிக அருமை. அரசியல் உணர்வு மலிந்து வருகின்ற இக்காலத்தில் சமயநெறிக் கொள்கைகளைப் பலர் எள்ளுகிறார்கள். வான வாழ்வை நினைப்பவர்கள் வைய வாழ்வைத் தாழ்வாகக் கருதுகிறார்களென்றும், வான வாழ்வை மறந்தவனே வையத்தில் நன்றாக வாழ முடியுமென்றும் எண்ணும் தவறான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை வையகம் என்பது ஒரு தனி மனிதன் மாத்திரம் வாழும் இடம் அன்று. ஒரு தனி மனுதனுடைய வள வாழ்வு உலகத்தின் வள வாழ்வு என்று கருத முடியாது. தனி மனிதனும் உடம்பை வைத்துக் கொண்டுதான் வாழ்கிறான். அந்த உடம்பிலும் பல உறுப்புக்கள் இருக்கின்றன. பூமியை நோக்கியிருக்கின்ற காலும், வானை நோக்கி இருக்கின்ற தலையும், பின்னோக்கி இருக்கின்ற முதுகும், முன்நோக்கி இருக்கின்ற மார்பும் அவன் உடம்பி லேயே உள்ளன. ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு காரியத்தைச் செய்வதாகவும், ஒவ்வொரு திசையை நோக்குவதாகவும் இருக் கின்றன. 'எல்லாக் காரியத்தையும் நான்தானே செய்கிறேன்?" என்று கை, அவன் உடம்பிலுள்ள காலை ஒடித்துவிட்டால் அவன் நன்றாக வாழ்வானா? உலகத்தில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அவரவர்களுடைய செயல்கள் வேறுபடுகின்றன. வைய வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அத்தனை கோடி மக்களின் வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும். ஒரு சமுதாயத்தில் பத்திரிகை ஆசிரியன் இருக்கிறான்; பள்ளி ஆசிரியன் இருக்கிறான்; தொழிலாளி இருக்கிறான்; முதலாளி இருக்கிறான்; 8