பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இறைவன் தாள் 'என்னுடைய அறிவு அறத்தைப் பற்றிக் கொள்ளாமல் இன்பத்தைப் பற்றிக் கொண்டமையினால் வாழும் வகை தெரியாமல் மயக்கமுற்றுக் கிடக்கிறேனே! கொம்பு இல்லாமல் கொடி துவளுவது போல நான் துவளுகின்றேனே! இதற்கு நான் என்ன செய்வேன், ஆண்டவனே! உன் தாளைத் தேடிக் கொண்டு வரும் நிலைமையில் நான் இல்லை. அதனைப் பற்றிக் கொண் டால்தான் எனக்கு நன்மை உண்டாகும் என்று தெரிகிறது. என் னுடைய முயற்சியினால் அதனை அடைவதற்கு வகை இல்லா மல் இருக்கிறேன். நீயே உன்னுடைய பெருங் கருணையினால் தாமரை மலர்போன்ற திருத்தாளைத் தர வேண்டும்” என்கிறார் அருணகிரியார் . உய்யும் வகை அறியேன் மலர்த்தாள் தருவாய். எம்பெருமானுடைய தாமரை போன்ற மலர்த்தாள் சுத்த ஞானத்தின் அடையாளம். 'தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானம்எனும் தண்டையம் புண்டரிகம் தருவாய்' என்று பிறிதோரிடத்தில் சொல்கிறார். இறைவனுடைய திரு வடியைப் பற்றிக் கொள்வதாவது ஞானத்தைப் பெறுதல். ஞானம் உண்டானால் அறியாமை நீங்கும். மாயை நம்மிடத்தில் இடம் பெறாது. பாலே யனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றி, என்றும் மாலேகொண்டு உய்யும் வகையறியேன், மலர்த்தாள் தருவாய். எம்பெருமான் ஞான மயமானவன். அவனுடைய மலர்த் தாள் ஞானத்தின் பீடம். அதனைப் பற்றிக் கொள்கிறவனுக்கு ஞானம் உண்டாகும்; அஞ்ஞானம் போய்விடும். சோர்வு, துன்பம் ஆகியவை அகன்றுவிடும். அதனை நினைந்தே, 'மயல்பட்டு, உய்யும் வகை தெரியாத எனக்கு ஞானமயமான உன் மலர்த் தாளைப் பற்றிக் கொள்ளும் வகையை அருளவேண்டும்' என்று அருணகிரியார் சொன்னார். இனி இந்தத் துதியை யாரை நோக்கிச் சொல்கிறாரோ அந்தப் பெருமானைப் பற்றிய செய்திகள் பின்பு வருகின்றன. 172