பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் 2 ஆதிசேடன் முருகன் திருமாலுக்கு மருகன். அந்த உறவை எண்ணும் போது அருணகிரியார் திருமாலின் பெருமையையும் உடன் சொல்வதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். திருமால் ஆதிசேடன்மேல் படுத்துக் கொண்டிருக்கிறார். ஆதிசேடனாகிய பாம்புக்குக் கால் இல்லை. பாம்பு காற்றையே உணவாகக் கொள்ளும் என்று சொல்வார்கள். ஆதிசேடன் என் னும் பாம்பு காற்றை மிகவும் உண்டு, காலே இல்லாத உருவோடு இருக்கிறது. ஆயிரம் தலையை உடையது அது. படத்திற்குப் பணம் என்று பெயர். ஒரே கூட்டமான பணத்தை உடைய ஆதிசேடன் மேல் திருமால் பள்ளி கொண்டிருக்கிறார். 'கால்' என்பதற்குக் காற்று என்றும், நடக்கும் கால் என்றும் இரண்டு பொருள் உண்டு. இதை வைத்துக் கொண்டு அருணகிரியார் இங்கே சமத்காரமாகப் பாடுகிறார். காலே மிகஉண்டு, காலே இலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளும் மாலோன் மருக! காலே மிக உண்டு என்று சொன்னார். பின்னர்க் காலே இலாத என்று மாறுபடுவது போலச் சொன்னார். முன்னால் உள்ள கால் என்பற்குக் காற்று என்று பொருள். பின்னாலே உள்ள கால் என்பதற்குப் பாதம் என்று பொருள். காற்றை மிகுதியாக உண்டு, காலே இல்லாத கூட்டமான படத்தை உடைய ஆதி சேடன் மேலே துயில் கொள்ளும் திருமால் என்று பொருள் கொள்ள் வேண்டும். பாம்பு காற்றை மிகுதியாக உண்டு நல்ல படுக்கையாக அமைந்திருக்கிறது. காற்றை ஊதிய தலை அணையையும், படுக்கையையும் பிரயாணம் செய்கிறவர்கள் வைத்திருக்கிறார்கள், இக்காலத்தில். ஆதிசேடன் மூச்சு விடும் போது அதன் உடம்பு மேலும் கீழும் ஏறி இறங்கும். அது நல்ல வில்விசையுடைய மெத்தைபோல இருக்கும். அதில் படுத்து உறங்கினால் சுகமாகத் தூக்கம் வரும் அல்லவா? அது மாத்திரம் அன்று. பாம்பு குளிர்ச்சி யாக இருக்கும். மெத்த்ென்ற மெத்தை, தாழ்ந்து உயரும் சுகமான 173