பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 மெத்தை, குளிர்ச்சியான மெத்தை - இப்படியாக அமைந்திருக் கிறது ஆதிசேடன். இதன் மேலே திருமால் துயில்கிறார். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரு படத்தை உடைய நாகப்பாம்பைக் கண்டால் உலகமே அஞ்சி நடுங்குகிறது. ஆயிரம் தலையையுடைய ஆதிசேடன் மேல், அதையே படுக்கையாகக் கொண்டு அச்சம் இல்லாமல் தூங்கு கிறார் திருமால். தூங்குவது கவலையின்மையைக் காட்டுவதற்கு அறிகுறி. மற்ற எந்தக் கவலையும் இல்லா திருப்பதோடு, இந்தப் பாம்பு கடித்துவிடுமே என்கிற கவலையும் இல்லாமல் பாம்புப் படுக்கையின்மேல் திருமால் துயில்கிறார். கணபணத்தின் மேலே துயில்கொள்ளும். கணபணம் - பணங்களின் கூட்டம். அத்தகைய திரு மாலினுடைய மருகன் ஆகிய முருகனே என்ற விளித்து இந்தப் பாட்டைப் பாடுகிறார். - மாலோன் மருகசெவ் வேலவனே! நாகமும் பெண்களும் ாம் உலகமாகிய மாயையில் சிக்கி, பெண்களிடத்தில் இன்பத்தைப் பற்றி நின்று அறத்தை மறந்து மயல் கொண்டு தவிக்கிறோம். இந்தக் காரணத்தால் பெண்களை எல்லாம் வெறுக்கலாமா? நல்ல பொருளாக இருப்பவற்றிலும் நம்முடைய அழுக்குச் சம்பந்தத்தால் அழுக்கைக் காண்கிறோம். நஞ்சை உடைய நாகத்தில் மாணிக்கம் இருக்கிறது. நஞ்சைக் கக்காமல் நாகத்தை அமிழ்த்தி வைத்திருக்கிறவனுக்கு அந்த மாணிக்கம் கிடைக்கும். பாலே அனைய மொழியாரிடத்தில் காமத்தைக் கருதாமல் அறத்தைக் கருதினால் நல்ல பயன் உண்டாகும். பாம்பை அடக்கும் வித்தையை நன்கு கற்றிருக்கும் குடும்பம் முருகப் பெருமானின் குடும்பம். அவனுடைய மாமா ஆதிசேட னின் ஆயிரம் படங்களையும் அமிழ்த்தி, அதனைத் தமக்குப் படுக்கையாகக் கொண்டு கவலை இல்லாமல் உறங்குகிறார். 'எல்லோரும் அஞ்சுவதற்குரிய பொருளைக் கண்டும் அஞ்சாமல் அடக்கி வைக்கக் கூடிய திருமாலின் மருகன் நீ. அச்ச மின்றி அற நினைவோடு இன்பம் பெற்று வாழ்வதற்குரிய 工了4