பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பங்கை உடம்புக்காகவே செலவிடுகிறோம். இந்த உடம்பு, தனக்காக நம்மை எந்த எந்த வகைகளில் எல்லாம் ஆட்டி உருக் குலைக்கின்றது என்று கணக்கிட முடியுமா? அதனால்தான், 'விதிகாணும் உடம்பை விடாவினையேன்” என்று நொந்துகொள்கிறார் அருணகிரியார். நல்ல மாம்பழத்தைக் கண்டால் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வருவதில்லை. வெடுக்கென்று கடித்துத் தின்னவேண்டு மென்ற ஆசை முந்துகிறது. நாக்கு ருசி, அந்த நினைப்பை வர வொட்டாமல் கெடுக்கிறது. 'இந்திரிய சுகம் ஒன்றே சுகம்' என்று கருதி உலகத்தில் வாழ்கிறோம். உடம்பின் சதை கொஞ்சம் குறையட்டும்; நம்மைப் பார்க்கிறவர்கள் கூட, 'என்ன மிகவும் இளைத்துவிட்டதே! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்கிறார்கள். நிணத்தை, மாமிசத்தை வளர்த்துக் கொள்வதில் அத்தனை அக்கறை நிணம் காட்டும் கொட்டிலை. கொட்டிலும் மாடும் மாமிசம் நிறைந்த கொட்டிலை நாம் வைத்துக் கொண்டிருக் கிறோம். மாடுகள் தங்கும் இடத்தைக் கொட்டில் என்பர். அங்கே ஒரே சாணம், மூத்திரந்தான் இருக்கும். கெட்ட நாற்றமாக இருக்கும். கொட்டிலில் மனிதன் வாழ முடியுமா? நிணம் பொதிந்த உடம்பாகிய இந்தக் கொட்டிலில் மாடுகள் இருக்கின்றனவா? ஐந்து மாடுகள் இருக்கின்றன என்று திருமூலர் சொல்கிறார். இந்தக் கொட்டிலில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். நம்மைத் தவிர வேறு ஐந்து பசுக்களும் இருக்கின்றன. பெரும்பான்மையாக இருப்பவை பசுக்கள். ஆதலால் இது நாம் இருக்கும் வீடு என்று சொல்ல முடியாது. பசுக்கள் வாழும் கொட்டில் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கொட்டிலில் ஐந்து இந்திரியங்களாகிய பசுக்கள் வாழ்கின்றன. இந்த ஐந்தோடு ஆறாவதாக நாம் இருக்கிறோம். ஆகவே, உடம்பை நாம் வாழும் வீடு என்று சொல்வது தவறு. 186