பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை இந்திரியமாகிய மாடுகள் வாழும் கொட்டில் என்பதுதான் சரி. திருமூலர் சொல்வதைப் பார்க்கலாம். திருமூலர் காட்டும் காட்சி ஒரு பார்ப்பான், தான் வசிக்கும் ஒரு கொட்டிலை, "என் னுடைய அகம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்தப் பார்ப்பான் அகத்திலே அவனைத் தவிர ஐந்து பசுக்கள் இருக் கின்றன. பசுவின் பால் மிகவும் நல்லதாயிற்றே என்று எண்ணி அப்பசுக்களிடத்தில் அவன் பால் கறக்கப் போனால் அவை சீறுகின்றன. அவற்றைச் சரியாக அடக்கி மேய்க்கின்ற ஒருவன் இல்லாததனாலே அவை வெறித்துத் திரிகின்றன. தட்டிக் கொடுத்து அடக்கலாமென்று நெருங்கினால் கொம்புகளால் முட்டுகின்றன. வெறித்துக் கிடக்கின்ற கொண்டி மாடுகள் ஐந்தை வீட்டிலே வைத்துக் கொண்டு அரை ஆழாக்குப் பால் காசுக்கு வாங்கி ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்கிறான். பசுமாடுகள் ஒன்றுக்கு ஐந்தாக அவன் அகத்திலே இருந்தும் என்ன பயன்? நல்ல மனிதர் ஒருவர் வந்து சேர்ந்தார். "ஐந்து மாடுகளை வைத்துக் கொண்டு எதற்காகச் சுவாமி பால் வாங்குகிறீர்?' என்று கேட்டார். "ஐயையோ அவை கொண்டி மாடுகள். அவற்றினிடம் போகவே நான் பயப்படுகிறேன். அருகிலே போனாலே முட்டு கின்றன; உதைக்கின்றன. நான் எப்படிப் பால் கறப்பேன்?" என்று பார்ப்பான் அழுதான். வந்த மனிதர் சிரித்தார். 'ஐயா, பசுமாடுகள் இயல்பாகச் சாதுவானவை. உங்களுக்கு அவற்றை அடக்கத் தெரியவில்லை. எப்படி அடக்குகிறது என்று நான் சொல்லித் தருகிறேன், பாருங்கள். அப்புறம் அவை எவ்வளவு பால் கறக்கும் தெரியுமா?' என்று சொல்லி அவற்றை அடக்கும் உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தார். 'மெள்ளத் தடவிக் கொடுங்கள். தேங்காயும் வெல்லமும் சேர்த்துக் கொடுங்கள். அப்புறம் மாடுகள் உங்கள் பின்னாலேயே வருகின்றனவா, இல்லையா, பாருங்கள். எதற்கும் ஒர் ஆளையும் போட்டுக் கொள்ளுங்கள்' என்று தந்திரம் சொல்லிக் கொடுத்தார். அவன் அப்படியே செய்தான். மாடுகளின் வெறி அடங்கிவிட்டது. மேய்க் கிற ஆளும் கிடைத்தான். இந்தப் பார்ப்பான் குடத்தை எடுத்துக் கொண்டு மாடுகளுக்கு அடியில் போய் உட்கார வேண்டியது 18了